புளுட்டோனியம் சிலிசைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

புளுட்டோனியம் சிலிசைடு (Plutonium silicide) என்பது PuSi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] புளுட்டோனியமும் சிலிக்கானும் சேர்ந்து இந்த இரும சேர்மம் சாம்பல் நிற படிகங்களாக உருவாகிறது.

தயாரிப்பு

புளூட்டோனியம் ஈராக்சைடும் சிலிக்கான் கார்பைடும் வினைபுரிவதால் புளுட்டோனியம் சிலிசைடு உருவாகிறது.

𝖯𝗎𝖮𝟤+𝖲𝗂𝖢 T 𝖯𝗎𝖲𝗂+𝖢𝖮𝟤

புளூட்டோனியம் முப்புளோரைடுடன் சிலிக்கான் வினைபுரிவதாலும் புளுட்டோனியம் சிலிசைடு கிடைக்கிறது.

𝟦𝖯𝗎𝖥𝟥+𝟩𝖲𝗂 T 𝟦𝖯𝗎𝖲𝗂+𝟥𝖲𝗂𝖥𝟦

பண்புகள்

புளுட்டோனியம் சிலிசைடு செஞ்சாய்சதுரப் படிக வடிவத்தில் Pnma என்ற இடக்குழுவும், a = 0.7933 நானோமீட்டர், b = 0.3847 நானோமீட்டர், c = 0.5727 நானோமீட்டர், Z = 4, என்ற அலகு அளவுருக்களுடன் TiSi வகை கட்டமைப்பும் கொண்டு உருவாகிறது.

72° கெல்வின் வெப்பநிலையில், புளுட்டோனியம் சிலிசைடு ஒரு பெர்ரோகாந்த மாற்றத்திற்கு உள்ளாகிறது [4]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist