புளுட்டோனியம் பாசுபைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

புளுட்டோனியம் பாசுபைடு (Plutonium phosphide) PuP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு முறை

தூளாக்கப்பட்ட புளுட்டோனியத்துடன் மிகையளவு பாசுபரசை சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து வினைபுரியாத பாசுபரசை காய்ச்சி வடித்தால் புளுட்டோனியம் பாசுபைடு கிடைக்கிறது.:[3]

Pu+PPuP

பாசுபீனை சூடுபடுத்தப்பட்ட புளுட்டோனியம் ஐதரைடு மீது செலுத்தினாலும் புளுட்டோனியம் பாசுபைடு கிடைக்கிறது.

PuHA3+PHA3PuP+3HA2

இயற்பியல் பண்புகள்

Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5660 nm, Z = 4, என்ற அலகு அளபுருக்களுடன் சோடியம் குளோரைடு வகை கட்டமைப்பில் புளுட்டோனியம் பாசுபைடு கனசதுர வடிவத்தில் கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது.[4][5]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:புளுட்டோனியம் சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபரசு சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபைடுகள்