புளூட்டோ

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox planet புளூட்டோ (Pluto, வழமையான குறியீடு: 134340 புளூட்டோ; சின்னங்கள்: ⯓[1] மற்றும் ♇[2]) அல்லது சேணாகம் என்பது கதிரவ அமைப்பில் (ஏரிசுவை அடுத்து) இரண்டாவது பெரிய குறுங்கோளும் கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் ஒன்பதாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் கதிரவனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது. நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது.[lower-alpha 1] புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.

கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது[3]

வகைப்பாடு

கோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை: கதிரவ அமைப்பில் உள்ள விண்பொருள் ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்: அப்பொருள்

  1. கதிரவனை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவர வேண்டும்.
  2. நிலைநீர் சமநிலையை (கிட்டத்தட்ட கோள வடிவம்) எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.
  3. தன் சுற்றுப்பாதைச் சூழலில் ‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’.

புளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது.

புளூட்டோவின் சரோனும் சூரியனும்
புளூட்டோவின் சுற்றுப்பாதை

புளூட்டோவின் துணைக்கோள்கள்

கீழ்வருவன புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள்களின் அளவைகள் ஆகும்.

புளூட்டோவும் அதன் துணைக்கோள்களும்
பெயர் கண்டுபிடித்த ஆண்டு விட்டம்
(கிலோமீட்டர்கள்)
நிறை
(நிலவின் கிலோகிராம்கள்)
சுற்றாரம்
(கிலோமீட்டர்கள்)
சுற்றுக்காலம் (d) பருமன் (mag)
புளூட்டோ 1930 2,306
(66% நிலவு)
1.305 வார்ப்புரு:E
(18% நிலவு)
2,035 6.3872
(25% நிலவு)
15.1
சரோன் 1978 1,205
(35% நிலவு)
1.52 வார்ப்புரு:E
(2% நிலவு)
17,536
(5% நிலவு)
6.3872
(25% நிலவு)
16.8
எஸ் 2012 2012 10–25 ? ~42,000 +/- 2,000 20.2 +/- 0.1 27
நிக்சு 2005 91 4 வார்ப்புரு:E 48,708 24.856 23.7
எஸ் 2011 2011 13–34 ? ~59,000 32.1 26
ஐடுரா 2005 114 8 வார்ப்புரு:E 64,749 38.206 23.3

இவை தவிர்த்து புளுட்டோவின் அரைகுறை துணைக்கோளாக (15810) 1994 ஜே.ஆர்.1 உள்ளது. இது ஏற்கனவே புளூட்டோவின் ஒரு துணைக்கோளாக 10 இலட்சம் ஆண்டுகள் இருந்துள்ளது. இன்னும் இருபது இலட்சத்திலிருந்து இருபத்தியைந்து இலட்சம் ஆண்டுகள் இது புளூட்டோவின் துணைக்கோளாக இருக்கும்.

மூல நூல்

குறிப்புகள்

வார்ப்புரு:Reflist

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:கோள்கள்

  1. வார்ப்புரு:Cite web
  2. வார்ப்புரு:Cite book
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AstDyS-Pluto என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=புளூட்டோ&oldid=8" இலிருந்து மீள்விக்கப்பட்டது