பெஃபர்மான் சூட் வரிசை
Jump to navigation
Jump to search
கணிதத்தில் பெஃபா்மான் சூட் வரிசை (Feferman–Schütte ordinal) (Γ0) என்பது பொிய எண்ணிடத்தக்க வரிசையாகும். கணிதவியலாளர்கள் சாலமன் பெஃபா்மான், குா்ட் ஸுட் ஆகிய இருவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. இதன் குறியீடான Γ0 என்பது பெஃபர்மானால் பரிந்துரைக்கப்பட்டது[1]
பெஃபா்மான் ஸுட் வரிசையைத் தவிர வேறெந்தவொரு தரமான குறியீடுகளும் கணங்களின் வரிசைக்கு இல்லை. பெஃபா்மான் ஸுட் வரிசையைக் குறிப்பதற்கும் பல்வேறு விதங்கள் உள்ளன. அவற்றுள் சில , , , போன்ற வரிசை வீழ் சார்புகளைப் பயன்படுத்துகின்றன.
வரையறை
பெஃபா்மான் ஸுட் வரிசை, 0 ஐ தொடக்கமாகக் கொண்டதும், வரிசைகளின் கூட்டல் செயலையும் வெப்லன் சாா்புகளையும் (φα(β)) கொண்டு உருவாக்க முடியாததுமான மிகச்சிறிய வரிசையாக வரையறுக்கப்படுகிறது.
அதாவது இது,
- φα(0) = α. என்பதை நிறைவு செய்யும் வகையிலமைந்த மிகச்சிறிய "α" ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ G. Takeuti, Proof Theory (1975, p.413)