பெராக்சியிருபாசுபாரிக் அமிலம்
வார்ப்புரு:Chembox பெராக்சியிருபாசுபாரிக் அமிலம் (Peroxydiphosphoric acid) (H4P2O8) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் பாசுபரசின் ஆக்சியமிலமாகும். இதனுடைய உப்புகள் பெராக்சியிருபாசுபேட்டுகள் எனப்படுகின்றன. அறியப்படும் இரண்டு பெராக்சிபாசுபாரிக் அமிலங்களில் பெராக்சியிருபாசுபாரிக் அமிலம் ஒன்றாகும். பெராக்சியொருபாசுபாரிக் அமிலம் மற்றொன்றாகும்.
வரலாறு
பெராக்சிபாசுபாரிக் அமிலங்கள் இரண்டும் முதன்முதலில் 1910 ஆம் ஆண்டில் சூலியசு சுமிட்லின் மற்றும் பால் மாசினி ஆகியோரால் ஒருங்கிணைந்து தயாரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டன. [1]பைரோபாசுபாரிக் அமிலத்துடன் உயர் செறிவிலுள்ள ஐதரசன் பெராக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்கையில் பெராக்சியிருபாசுபாரிக் அமிலம் குறைவான அளவிலேயே கிடைத்தது. [2]
தயாரிப்பு
பாசுபாரிக் அமிலத்துடன் புளோரின் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பெராக்சியிருபாசுபாரிக் அமிலம் தயாரிக்கலாம். இவ்வினையில் பெராக்சியொருபாசுபாரிக் அமிலம் உடன் விளைபொருளாக உருவாகிறது.
இச்சேர்மம் வணிக ரீதியாக கிடைப்பதில்லை. தேவைக்கேற்பவே தயாரிக்கப்பட வேண்டும். பாசுபேட்டு கரைசல்களை மின்னாற்பகுப்பு செய்து பெராக்சியிருபாசுபேட்டுகளைப் பெறலாம். [3]
பண்புகள்
பெராக்சியிருபாசுபாரிக் அமிலம் நான்கு புரோட்டான்கள் வழங்கும் அமிலமாகும். இதன் காடித்தன்மை எண்கள் pKa1 ≈ −0.3, pKa2 ≈ 0.5, pKa3 = 5.2 and pKa4 = 7.6 என அளவிடப்பட்டுள்ளன. [4]நீரிய கரைசல்களுடன் சேர்த்து சூடுபடுத்தும்போது பெராக்சியொருபாசுபாரிக் அமிலம் மற்றும் பாசுபாரிக் அமிலமாக விகிதச்சமமின்றி பிரிகிறது. [5]