பொட்டாசியம் பாசுபைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

பொட்டாசியம் பாசுபைடு (Potassium phosphide) என்பது K3P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். குறைக்கடத்தியான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் ஒரு படிகத்திண்மமாக அறுகோண[1] கட்டமைப்பில் காணப்படுகிறது.[2] தண்ணீருடன் தீவிரமாக வினைபுரியும். நச்சுத்தன்மையுடையது என்பதால் உட்செலுத்துதல், உள்ளிழுத்தல் மற்றும் தோல் மேல் படுதல் போன்ற நடவடிக்கைள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.[3]

தயாரிப்பு

பொட்டாசியம் மற்றும் பாசுபரசு தனிமங்களை நேரடியாக வினையில் ஈடுபடுத்தி பொட்டாசியம் பாசுபைடு தயாரிக்கப்படுகிறது:[4]

3K+PKA3P

பயன்கள்

அதிக சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகளிலும் சீரொளி இருமுனையங்களிலும் பொட்டாசியம் பாசுபைடு பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:பொட்டாசியம் சேர்மங்கள்