பொட்டாசியம் பெர்சல்பேட்டு
வார்ப்புரு:Chembox பொட்டாசியம் பெர்சல்பேட்டு (Potassium persulfate) என்பது K2S2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் பெராக்சி இருசல்பேட்டு என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் வெண்மை நிறத் திண்மமாகவும் தண்ணீரில் நன்றாகக் கரையக்கூடியதாகவும் உள்ளது. வலிமையான ஆக்சிசனேற்றியாகச் செயல்படும் இவ்வுப்பு பலபடியாதல் வினைகளை தொடங்கி வைக்கும் சேர்மமாக விளங்குகிறது.
தயாரிப்பு
கந்தக அமிலத்தில் இட்ட பொட்டாசியம் பைசல்பேட்டின் குளிர்ந்த கரைசலை அதிக மின்னடர்த்தியில் மின்னாற்பகுப்பு செய்து பொட்டாசியம் பெர்சல்பேட்டைத் தயாரிக்கலாம்[1]
- 2 KHSO4 → K2S2O8 + H2
பொட்டாசியம் பைசல்பேட்டுடன் (KHSO4) அதிக கரைதிறன் கொண்ட உப்பான அமோனியம் பெராக்சி இருசல்பேட்டு (NH4)2S2O8. கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் பொட்டாசியம் பெர்சல்பேட்டைத் தயாரிக்கலாம். பொதுவாக பொட்டாசியத்தின் சல்பேட்டு உப்பை புளோரினைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் பொட்டாசியம் பெர்சல்பேட்டைத் தயாரிப்பது உரிய வழிமுறையாகும்.
பயன்கள்
இவ்வுப்பு பல ஆல்கீன்களின் சிடைரின்-பியூட்டாடையீன் ரப்பர், பல்நாற்புளோரோ எத்திலீன் போன்ற பலபடியாக்கல் வினைகளையும் அவற்றைச் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கான வினையையும் தொடங்கி வைக்கிறது. கரைசலாக இருக்கும்போது இவ்விரு எதிர் அயனிச் சேர்மம் பிரிகையடைந்து தனி உறுப்புகளாக மாறுகிறது:[2].
- [O3SO-OSO3]2− 2 [SO4]−
பீனால்களின்[3] எல்ப்சு பெர்சல்பேட்டு ஆக்சிசனேற்ற வினையில் இது ஆக்சிசனேற்றியாகச் செயல்படுவது போல கரிம வேதியியல்|கரிம வேதியியலில்]] ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு வலுவான வெளுக்கும் முகவராக இது ஐதரசன் பெராக்சைடுடன் சேர்க்கப்பட்டு தலைமுடி சாயங்களை வெளுக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாதிரிகளுக்கு குறிப்பாக நீர்க்கரைசல்களுடன் ஒரு ஆக்சிசனேற்றியாகச் செயல்பட்டு நைட்ரசன் அடங்கிய சேர்மங்களை உறுதிப்படுத்த இச்சேர்மம் உதவுகிறது.[4]
முன்னெச்சரிக்கை
வலுவான ஆக்சிசனேற்றியாக இருப்பதால் கரிமச் சேர்மங்களுடன் பொருந்தாமல் முரண்பட்டு காணப்படுகிறது.
மேற்கோள்கள்
வார்ப்புரு:பொட்டாசியம் சேர்மங்கள் வார்ப்புரு:கந்தகச் சேர்மங்கள் வார்ப்புரு:கார உலோகங்களின் சேர்மங்கள் வார்ப்புரு:ஆக்சிசனேற்றிகள்
- ↑ F. Feher, "Potassium Peroxydisulfate" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 392.
- ↑ வார்ப்புரு:Ullmann
- ↑ Encyclopedia of Reagents for Organic Synthesis, vol. 1, pp 193-197(1995)
- ↑ Method 4500-N C. Persulfate Method for Total Nitrogen. In Standard Methods for the Examination of Water and Wastewater