பொதுப் பேரேடு
வார்ப்புரு:கணக்குப்பதிவு கணக்குவைப்பில், ஒரு பொதுப் பேரேடு (general ledger) கணக்குவைப்புப் பேரேடு ஆகும். இதில் கணக்குத் தரவுகள் கையேடுகளில் இருந்தும் தரவேண்டிய கணக்குகள், பெறவேண்டிய கணக்குகள் காசு மேலாண்மை, நிலைச் சொத்துகள் கொள்முதல், திட்டங்கள் போன்ற தொகுத்த உட்பேரேடுகளில் இருந்தும் தொகுக்கப்படுகின்றன.[1] பொதுப் பேரேடு தாளிலோ, கணினியிலோ முகிலிலோ பேணப்படலாம்.[2] நிறுவனத்தின் கணக்குகளின் பட்டியலில் உள்ள ஒவ்வொரு கணக்குக்கும் பேரேட்டுக் கணக்கை உருவாக்கவேண்டும். இவை வருவாய், செலவு, சொத்துகள், வாய்ப்புள்ள இழப்பீடுகள், பங்குகள் போன்ற கணக்கு வகையினங்களில் பிரித்து வகைப்படுத்தவேண்டும்; இந்த அனைத்துக் கணக்குகலின் தொகுப்பே பொதுப் பேரேடு ஆகும். பொதுப்பேரேடு நிறுவனத்தின் நிதி, நிதி சாரா தரவுகளைப் பெற்றிருக்கிறது.[3] பொதுப் பேரேட்டில் உள்ல ஒவ்வொரு கணக்குக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்கல் ஒதுக்கப்படும். ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையும் [[வருவாய் அறிக்கை]யும்]] பேரேட்டு வருவாய், செலவுக் கணக்கு வகையினங்களில் இருந்து பெறப்படுகிறது.[4]
பொதுப் பேரேடு என்பது இரட்டைப் பதிவுமுறையைப் பயன்படுத்தும் தொழில்களின் முதன்மையான கணக்குப் பதிவாகும். இது வழக்கமாக நடப்புச் சொத்துக்கள், நிலையான சொத்துக்கள், பொறுப்புக்கள், வருவாய் , செலவு கூறுபாடுகளையும், ஈட்டங்கள், இழப்புகள் கூறுபாடுகளையும் உள்ளிட்டதாக இருக்கிறது. ஒவ்வொரு பொதுப் பேரேடும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இடதுபக்கம் பற்று நடவடிக்கைகளையும் வலதுபக்கம் வரவு நடவடிக்கைகளையும் பட்டியலிடுகிறது. இது ஒவ்வொரு தனிப்பட்ட பொதுப் பேரேட்டுக் கணக்கிற்கும் 'T' வடிவத்தை வழங்குகிறது.
ஒரு "T" கணக்கு இடதுபக்கத்தில் பற்றுக்களையும் வலதுபக்கத்தில் வரவுகளையும் பின்வருமாறு காட்டுகிறது.
| பற்றுகள் | வரவுகள் |
|---|---|
சொற்பொருளியல்
பொதுப் பேரேடு கணக்குகள் பட்டியலில் உள்ள அனைத்துக் கணக்குகளுக்கும் ஒருபக்கம் ஒதுக்கும்.[5] இவை கணக்கு வகையினங்களின்படி வரிசையொழுங்கில் வைக்கப்படும். பொதுப் பேரேடு குறைந்தது பின்வரும் முதன்மை வகையினங்களில் அமையும்: சொத்துகள், வாய்ப்புள்ள இழப்புகள், உரிமையாளரின் பங்கு, வருவாய், செலவுகள், ஈட்டங்கள், இழப்புகள்.[6] இது நிறுவன நிதி நடவடிக்கைகளின் அமைப்பாகும்.[7] பொதுப் பேரேட்டின் முதன்மை வகையினங்கள் காசு(உரொக்கம்), பெறவேண்டிய கணக்குகள், தரவேண்டிய கணக்குகள் போன்ற கூடுதல் விவரங்களை அளிக்கும் உட்பேரேடுகளாகப் பிரிக்கப்படலாம். எடுத்துகாட்டாக, பெறுதல் கணக்குகள் துணைப் பேரேடு ஒவ்வொரு கடன் வாடிக்கையாளருக்குமான தனிப்பட்ட கணக்கை உள்ளிட்டிருக்கலாம் என்பதோடு அந்த வாடிக்கையாளரின் இருப்புத்தொகையை தனியாகக் கண்காணிக்கலாம். இந்தத் துணைப்பேரேடு பின்னர் இருப்பு நிலைக் குறிப்பை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக துல்லியத்தன்மையை உறுதிப்படுத்திட அதனுடைய கட்டுப்பாட்டுக் கணக்கை (இந்நிலையில், பெறுதல் கணக்குகள்) கூட்டி ஒப்பிடும்.[8]
கணக்கு இருப்புகளைப் பிரித்தெடுப்பது இருப்பாய்வு அல்லது இருப்புநிலைக் குறிப்பு அல்லது ஐந்தொகைக் குறிப்பு எனப்படுகிறது. கணக்கின் பெயர்களைப் பட்டியலிடுதல் கணக்குகளின் அட்டவணை எனப்படுகிறது. கணக்குத் தொகைகளின் சாரம் இருப்புநிலைக் குறிப்பு ஆகும். நிதிநிலை அறிக்கை உருவாக்கச் செயல்முறையின் தொடக்க நிலையில் இருப்புநிலைக் குறிப்பின் நோக்கம் மொத்தப் பற்றுக்கள், வரவுகளின் கூடுதல் சமமாக இருப்பதை உறுதிப்படுத்துவதாகும்.[9]
பொதுப் பேரேடு என்பது முதன்மை நிதி அறிக்கைகளில் காட்டப்பட்டுள்ள மதிப்பு கூறுகளுக்கு உதவுக்கூடிய கணக்குக் குழுக்களின் தொகுப்பு ஆகும். இது விற்பனைப் புத்தகம், கொள்முதல் புத்தகம், உரொக்கம், பொதுக் குறிப்பேட்டு புத்தகம் ஆகியவற்றில் பதியப்பட்டுள்ள நடவடிக்கைகளை இட்டு, உருவாக்கப்படுகிறது. இந்த பொதுப் பேரேட்டிற்கு, பொதுப் பேரேட்டில் உள்ள கணக்குகளுக்கான விவரங்களை வழங்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைப் பேரேடுகள் உதவியளிக்கின்றன. எடுத்துகாட்டாக, பெறுதல் கணக்குகள் துணைப் பேரேடு ஒவ்வொரு கடன் வாடிக்கையாளருக்குமான தனிப்பட்ட கணக்கை உள்ளிட்டிருக்கலாம் என்பதோடு அந்த வாடிக்கையாளரின் மீதத்தொகையை தனியாகக் கண்கானிக்கலாம். இந்தத் துணைப்பேரேடு பின்னர் இருப்பு நிலைக் குறிப்பை உருவ்வாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக துல்லியத்தன்மையை உறுதிப்படுத்த அதனுடைய கட்டுப்பாட்டுக் கணக்கைக் (இந்நிலையில், பெறுதல் கணக்குகள்) கூட்டி ஒப்பிடும்.[8]

செயல்முறை
கணக்குப் பதிதல் என்பது பணத்தொகையை வரவுகளாகவும் (வலது பக்கம்) செலவுகளாகவும்(இடது பக்கம்) பேரேட்டுப் பக்கங்களில் பதிவுசெய்யும் செயல்முறையாகும். வலதுபுறம் உள்ள கூடுதல் நிரைகள் தொடர்மொத்தக் க்கூட்டுத்தொகையைக் காட்டுகின்றன.[10]
இறுதிக் கணக்கு, வருவாய் அறிக்கை ஆகிய இரண்டும் பொதுப் பேரேட்டிலிருந்தே பெறப்படுகின்றன. பொதுப் பேரேட்டில் உள்ள ஒவ்வொரு கணக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. பொதுப் பேரேடு என்பது இந்தக் கணக்குகளை பதிவதற்கான இடமாகும். பதிதல் என்பது தொகைகளை வரவுகளாகவும் (வலது பக்கம்), செலவுகளாகவும் (இடது பக்கம்) பொதுப் பேரேட்டின் பக்கங்களில் பதிவதாகும். வலதுபக்கம் உள்ள கூடுதல் பத்தி நடப்பிலுள்ள கூடுதலைக் குறிக்கும்.
பொதுப் பேரேடு ஒவ்வொரு கணக்கிற்குமான தேதி, விவரம், தொகை அல்லது கூடுதல் ஆகியவற்றை உள்ளிட்டிருக்க வேண்டும். இது வழக்கமாக குறைந்தது ஏழு முதன்மைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவுகள் பொதுவாக சொத்துக்கள், பொறுப்புக்கள், உரிமைதாரரின் பங்கு, வருவாய், செலவினங்கள்பீட்டங்கள், இழப்புகளை உள்ளிட்டிருக்கிறது. பொதுப் பேரேட்டின் முதன்மைப் பிரிவுகள் மேற்கொண்டு உரொக்கம், பெறுதல் கணக்குகள், செலுத்தல் கணக்குகள், இன்னபிற போன்றவற்றின் கூடுதல் தகவல்களை உள்ளிடுவதற்கான துணைப் பேரேடுகளாக பிரிக்கப்பட்டிருக்கலாம்.
ஒவ்வொரு கணக்குப் பதிவும் சமமான தொகையை ஒரு கணக்கில் பற்று வைக்கவும் மற்றொரு கணக்கில் வரவு வைக்கவும் செய்வதால் இரட்டைப் பதிவு முறை எப்போதும் சமமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. ஆகவே இது பின்வரும் கணக்குச் சமன்பாட்டைப் பின்பற்றுகிறது:
கணக்குப் பதிவுச் சமன்பாடு இறுதிக் கணக்கின் கணிதக் கட்டமைப்பாகும்.
கணக்குவைப்புச் சமன்பாடு என்பது இருப்புநிலைத்தாளின் (ஐந்தொகைத்தாளின்) கணிதவியல் கட்டமைப்பாகும். பேரேடு மிக எளிய வடிவம் கொண்டிருப்பினும், பல்வேறு துணைக் கிளைகள் கொண்டபெரிய சிக்கலான நிறுவனங்களில், பேரேடு மிகப் பெரியதாகி, அதன் இருப்புநிலைத் தணிக்கைக்கு பலமணி நேரம் அல்லது நாட்கள் பிடிக்கலாம்.[12]வார்ப்புரு:Citation needed
கணினி சாராத பிற முறைகளில், பொதுப் பேரேடு மிகப் பெரிய நூலாக அமையும். நிறுவனங்கள் பொதுப் பேரேடு உட்பட்ட தம் பேரேடுகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விரிதாட்களைப் பயன்படுத்தலாம் அல்லது தன்னியக்கமாகப் பேரேட்டுப் பதிவையும் கையாளலையும் செய்ய, கணக்குவைப்பு மென்பொள்களை(சிறப்பு மென்பொருள்களைப்) பயன்படுத்தலாம்.நிறுவனம் நிறுவன வளத் திட்டமிடல் (ERP) மென்பொருளைப் பயன்படுத்தினால், ERP மென்பொருள் வழியாக மேலாளப்படும் பிற செயல்முறைகளின் தரவுத்தளப் பதிவுகளில் இருந்து. மென்பொருளின் நிதிக்கூறாய்வுப் பகுதி, பொதுப் பேரேட்டையும் கிளைப்பேரேடுகளையும் உருவாக்கும்.
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ https://blog.workday.com/en-us/2022/understanding-the-basics-what-general-ledger.html
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ 8.0 8.1 வார்ப்புரு:Cite book
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ Meigs and Meigs. Financial Accounting, Fourth Edition . McGraw-Hill, 1983. pp.19-20.
- ↑ வார்ப்புரு:Cite webவார்ப்புரு:Dead link