பொலோனியம் டெட்ரா அயோடைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

பொலோனியம் டெட்ரா அயோடைடு (Polonium tetraiodide) PoI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. பொலோனியமும் அயோடினும் சேர்ந்து இந்த கனிமச் சேர்மம் உருவாகிறது. கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் டெட்ரா அயோடைடு எளிதில் ஆவியாகும்.

தயாரிப்பு

1. பொலோனியம் உலோகத்தின் மீது அயோடின் ஆவியைச் செலுத்தி வினைபுரியச் செய்து பொலோனியம் டெட்ரா அயோடைடு தயாரிக்கப்படுகிறது.

Po+2IA2PoIA4

2. பொலோனியம் ஈராக்சைடுடன் ஐதரயோடிக் அமிலத்தைச் சேர்த்தாலும் பொலோனியம் டெட்ரா அயோடைடு கிடைக்கிறது:[1]

PoOA2+4HIPoIA4+2HA2O

பண்புகள்

இயற்பியல் பண்புகள்

கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் டெட்ரா அயோடைடு தண்ணீரில் கரையாது.

வேதிப்பண்புகள்

ஐதரோ அயோடிக் அமிலத்துடன் பொலோனியம் டெட்ரா அயோடைடு வினையில் ஈடுபட்டு அறு அயோடோ பொலோனிக் அமிலம் உருவாகிறது.

PoIA4+2HIHA2[PoIA6]

வெப்பப்படுத்தினால் பொலோனியம் டெட்ரா அயோடைடு சிதைவடைகிறது.

ஐதரசன் சல்பைடுடன் பொலோனியம் டெட்ரா அயோடைடைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் பொலோனியம் உலோகம் உருவாகிறது.[2]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:பொலோனியம் சேர்மங்கள் வார்ப்புரு:அயோடைடுகள்