போலிங்கெர் பட்டைகள்

போலிங்கெர் பட்டைகள் (Bollinger bands) என்பது ஜான் போலிங்கெர் என்பவரால் 1980களில் உருவாக்கப்பட்ட ஒரு தொழினுட்பப் பகுப்பாய்வுக் கருவி ஆகும்.[1] இந்த போலிங்கெர் பட்டைகள் சராசரியாக நகர்கிற (moving average envelope) முறையைப் போன்றது. பங்குகளின் சராசரியாக நகர்கிற விலைக்கு மேலும் கீழும் ஒரு குறிப்பிட்ட இடைவழியில் இரண்டு கோடுகள் ஒரு உறை போன்று வரையப்பட்டிருக்கும். இந்த இரண்டு கோடுகளுக்கும் இடையில் உள்ள பகுதி ஒரு பட்டை (band) ஆகும். சராசரியாக நகர்கிற முறைக்கும் போலிங்கெர் பட்டைக்கும் இடையில் சிறிது வித்தியாசம் உள்ளது. சராசரியாக நகர்கிற முறையில் அதனுடைய பட்டையகலம் (band width) ஒரு குறிப்பிட்ட அளவைக் கொண்டிருக்கும். போலிங்கெர் பேண்டில் இந்த குறிப்பிட்ட அளவுக்குப் பதிலாக திட்ட விலக்கத்தை (standard deviation) கொண்டு அளவிடப்படுகிறது. திட்ட விலக்கம் பொதுவாகப் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் பொறுத்து அமைவதால் இதன் பட்டையகலம் தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது. [2]
விளக்கம்
போலிங்கெர் பட்டைகள் பங்குச்சந்தையில் பங்குகளின் விலையின் ஏற்ற இறக்கங்களை அறிய உபயோகப்படுத்தப்படும் பங்கு காட்டி (indicator) ஆகும். பங்குகளின் விலைக்கு ஏற்றவாறு இந்தப் பட்டை அகலம் வேறுபடும். பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக இருந்தால் (high volatility) போலிங்கெர் பேண்டில் பட்டை அகலம் கூடும். மாறாகப் பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறைவாக இருந்தால் (low volatility) போலிங்கெர் பேண்டில் பட்டை அகலம் குறையும். இதைக் கொண்டு பங்குகள் வாங்குவதை அல்லது விற்பதை முடிவுசெய்யலாம்.வார்ப்புரு:Cite web
போலிங்கெர் பட்டைகளின் பண்புகள்
ஜான் போலிங்கெர், இதன் பண்புகளை இவ்வாறு விவரிக்கிறார்.
- போலிங்கெர் பேண்டின் பட்டை அகலம் குறைவானதற்குப் பிறகு பங்குகளின் விலைமாற்றம் திடீரென மாறுவதற்கு வாய்ப்பு அதிகம்.
- பங்குகளின் விலை இந்தப் பட்டையை விட்டு வெளியே சென்றால் அதே போக்கு நீடிக்கும்.
- பங்குகளின் அதிக விலையும் குறைவான விலையும் இந்தப் பட்டைக்கு வெளியேயும், அதனைத் தொடர்ந்து பங்குகளின் அதிக விலையும் குறைவான விலையும் இந்தப் பட்டைக்கு உள்ளேயும் ஏற்பட்டால் போக்கில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கணக்கீடு
போலிங்கெர் பட்டைகளில் மூன்று கோடுகள் உள்ளன. அதாவது பங்குகளின் சராசரியாக நகர்கிற விலையின் மேல் மற்றும் கீழ் புறத்தில் உள்ளது இரண்டு கோடுகள் உள்ளன. பின்வரும் சமன்பாட்டில் "n" என்பது சராசரியாக நகர்கிற விலையின் எடுத்துக் கொள்ளப்படும் நாட்கள் ஆகும்.
நடுப் பட்டை =
மேல் பட்டையும் கீழ் பட்டையும், நடு பட்டையைலிருந்து திட்ட விலக்கத்திற்கு தகுந்த தொலைவில் இருக்கும். [3]
மேல் பட்டை = நடு பட்டை +
கீழ் பட்டை = நடு பட்டை-
போலிங்கெர் n = 20 என்பதைச் சராசரியாக நகர்கிற விலையாகக் கொண்டார். [3]