மாங்கனீசு ஆக்சலேட்டு
மாங்கனீசு ஆக்சலேட்டு (Manganese oxalate) என்பது MnC2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] மாங்கனீசும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. மெல்லிய இளஞ்சிவப்பு நிறப் படிகங்களாக மாங்கனீசு ஆக்சலேட்டு படிகமாகிறது. தண்ணீரில் இது கரையாது ஆனால் படிக நீரேற்றாக உருவாகிறது.[3] இலிந்பெர்கைட்டு கனிமமாக மாங்கனீசு ஆக்சலேட்டு இயற்கையில் தோன்றுகிறது.[4]
தயாரிப்பு
சோடியம் ஆக்சலேட்டும் மாங்கனீசு குளோரைடும் சேர்ந்து பரிமாற்ற வினையில் ஈடுபட்டு மாங்கனீசு ஆக்சலேட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
மாங்கனீசு ஆக்சலேட்டு இளஞ்சிவப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது.
இதன் p Ksp மதிப்பு 6.8 ஆகும். இது தண்ணீரில் கரையாது.
MnCவார்ப்புரு:SubOவார்ப்புரு:Sub•n Hவார்ப்புரு:SubO, என்ற வாய்ப்பாடு கொண்ட படிக நீரேற்றாக மாங்கனீசு ஆக்சலேட்டு படிகமாகிறது. இங்குள்ள n = 2 மற்றும் 3.[5]
MnCவார்ப்புரு:SubOவார்ப்புரு:Sub•2Hவார்ப்புரு:SubO என்ற வாய்ப்பாடு கொண்ட படிகநீரேற்று இளஞ்சிவப்பு நிற செஞ்சாய்சதுரப் படிகங்களாக இடக்குழு P212121, அலகு அளவுருக்கள் a = 0.6262 நானோமீட்டர், b = 1.3585 நானோமீட்டர், c = 0.6091 நானோமீட்டர், Z = 4, 100°செல்சியசு வெப்பநிலையில் உருகும்.[6][7]
வேதிப் பண்புகள்
மாங்கனீசு ஆக்சலேட்டு சூடுபடுத்தும் போது சிதைவடையும்:
பயன்பாடுகள்
- எண்னெய் உலர்த்தும் முகவராக மாங்கனீசு ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.
- MnO, Mn2O3 மற்றும் Mn3O4 போன்ற பல்வேறு மாங்கனீசு ஆக்சைடுகளின் ஒற்றை கட்ட நானோ துகள்களை ஒருங்கிணைக்க மாங்கனீசு ஆக்சலேட் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது.[8]