முன்னறிவாக்கம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

முன்னறிவாக்கம் (ஆங்கிலம்: Forecasting) என்பது கடந்த மற்றும் நிகழ் கால நிலையைப் பகுப்பாய்வு செய்து எதிர்கால நிலையைக் கணிக்கும் ஒரு முறையாகும். உலகம் எல்லாம் பொதுவாக அனைத்து தொழிலிலும் இந்த முன்னறிவாக்க முறையைப் பயன்படுத்தி எதிர்கால தேவைகளைக் கணக்கெடுக்கும் முறையாக ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் புள்ளியியல் முறையினை பயன்படுத்தியே கணிக்கப்படுகிறது.

இக்கட்டு மற்றும் சீரின்மை, முன்னறிவாக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். பொதுவாக முன்னறிவாக்கத்துடன் அதன் சீரின்மையையும் கூடவே குறிப்பிடுவது வழக்கமான ஒன்றாகும். எப்படியாயினும், முன்னறிவாக்கம் மிகச்சரியானதாக இருக்க பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும் தரவுகள் எப்பொழுதும் முறைப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.[1]

சராசரி முறை

இந்த முறையில் கடந்த கால தரவுகள் அனைத்தின் இடைநிலை (mean) மதிப்பையே எல்லா எதிர்கால மதிப்பிற்கு கணிப்பதாகும். இந்த முறையில் கடந்த கால தரவு இருக்கும் எந்த ஒரு விடயத்தையும் முன்னறிவாக்கம் செய்ய இயலும்.

காலத் தொடர்ச்சி குறிப்பீட்டில் :

y^T+h|T=y¯=(y1+...+yT)/T [2]

இங்கு y1,...,yT கடந்த கால தரவாகும்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=முன்னறிவாக்கம்&oldid=1174" இலிருந்து மீள்விக்கப்பட்டது