மும்மைப் புள்ளி
வெப்பவியக்கவியலில், ஒரு பொருளின் மும்மைப் புள்ளி (Triple point) என்பது அப்பொருளின் மூன்று கட்டங்கள் (வாயு, திரவம், திண்மம்) வெப்பச் சமநிலையில் ஒன்றுசேர்ந்தமையும் வெப்பநிலை, அழுத்தம் ஆகும்.[1] எடுத்துக்காட்டாக, பாதரசத்தின் மும்மைப் புள்ளி −38.8344 °C என்ற வெப்பநிலையிலும் 0.2 MPa அழுத்தத்திலும் ஏற்படும்.
திண்ம, திரவ, வாயு இடையேயான மும்மைப் புள்ளிகளைத் தவிர, பல்லுருவப் பொருட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட திண்ம நிலைகளினைக் கொண்ட மும்மைப் புள்ளிகள் இருக்கலாம். கீலியம்-4 ஒரு சிறப்பு வகையாகும், இது இரண்டு வெவ்வேறு திரவ நிலைகளைக் கொண்ட ஒரு மும்மைப் புள்ளியை தருகிறது. பொதுவாக p சாத்தியமான நிலைகளைக் கொண்ட தொகுதியில் அளவு மும்மைப்புள்ளிகள் உண்டு[1]
நீரின் மும்மைப் புள்ளியானது கெல்வின் எனப்படும் வெப்பவியக்கவியல் வெப்பநிலையின் அடிப்படை SI அலகினை வரையறுப்பதற்கு பயன்படுகிறது.[2]
நீரின் மும்மைப்புள்ளிகள்
திண்ம-திரவ-வாயு மும்மைப் புள்ளி
ஒரு குறித்த அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் திரவ நீர், திண்ம பனி, நீராவியின் கலவை நிலையான சமநிலையில் ஒன்றுசேர்ந்தமைவது சரியாக 273.16 K (0.01 °C) வெப்பநிலையிலும் 611.73 பாசுக்கல் (ca. 6.1173 மில்லிபார், 0.0060373 atm) பகுதி ஆவியழுத்தத்திலும் ஏற்படுகிறது. அந்த நிலையில், அதன் அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் தன்னிச்சையான சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் முழுவதையும் பனிக்கட்டியாக, நீராக, அல்லது நீராவியாக மாற்றலாம்.

மும்மைப் புள்ளிகளின் அட்டவணை
* கவனிக்கவும்: ஒப்பீட்டுக்காக, பொதுவான வளிமண்டல அமுக்கம்= 101.325 kPa (1 atm).