மையநோக்கு விசை

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

படிமம்:Roller coaster vertical loop.ogv

சீரான வட்ட இயக்கத்தை உணரும் ஒர் உடலிற்கு அதன் வட்டப்பாதையை தக்கவைப்பதற்கு படத்தில் காட்டப்பட்ட அச்சின் திசையில் ஓர் மையநோக்கு விசை தேவைப்படுகிறது.

மையநோக்கு விசை (centripetal force) என்பது ஒரு பொருளை வளைந்த பாதையில் பயணிக்க வைக்கும் விசையாகும். அதன் திசை எப்பொழுதும் பொருளின் திசைவேகத்திற்கு செங்குத்தானதாகவும் அக்கணத்தில் வளைவுப் பாதையின் மையத்தை நோக்கிச் செல்வதாகவும் இருக்கும். மையநோக்கு விசையே வட்ட இயக்கத்திற்கு காரணமாகும்.

எளிமையாக கூறுவதாயின் மையநோக்கு விசையென்பது சீரான வேகத்தில் இயங்கும் பொருளை வட்டப்பாதையில் வைத்திருக்கும் அதன் ஆரத்தின் வழியே வட்டத்தின் மையத்தினை நோக்கியிருக்கும் விசை எனலாம்.

சமன்பாடு

வளைவின் ஆரை r ஆக இருக்கும் பாதையில் v எனும் தொடுகோட்டு வேகத்துடன் இயங்கும் m நிறையுள்ள பொருளின் மீது செயல்படும் மையநோக்கு விசை: [1]

F=mac=mv2r

இங்கு ac மையநோக்கு முடுக்கம்.

இவ்விசை வட்டத்தின் மையம் பற்றிய கோணவேகம் ω சார்பாக இவ்வாறு எழுதப்படலாம்:

F=mrω2.

ஒர் சுழற்சிக்கான கால அளவு Tயைக் கொண்டு சமன்பாட்டைப் பின்வருமாறு எழுதலாம்:

F=mr4π2T2.[2]

மையநோக்கு விசைக்கான மூலங்கள்

ஒரு கோளைச் சுற்றி வரும் செயற்கைக்கோளிற்கு மையநோக்குவிசை அக்கோளின் ஈர்ப்பு விசையால் வழங்கப்படுகிறது.

கயிற்றில் கட்டி கிடைத்தளத்தில் சுழற்றப்படும் பொருளுக்கான மையநோக்கு விசை அக்கயிற்றின் இழுவையால் வழங்கப்படுகிறது.

மேற்கோள்களும் குறிப்புகளும்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=மையநோக்கு_விசை&oldid=860" இலிருந்து மீள்விக்கப்பட்டது