மையப்படுத்தப்பட்ட எண்முக எண்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox integer sequence மையப்படுத்தப்பட்ட எண்முக எண் (centered octahedral number) அல்லது அவுய் எண்முக எண் (Haüy octahedral number) என்பது, ஆதிப்புள்ளியை மையமாகக் கொண்ட எண்முகிக்குள் அமைந்த முப்பரிமாண முழுஎண் கூடமைப்பிலுள்ள புள்ளிகளின் எண்ணிக்கையை எண்ணுகின்ற, வடிவ எண்ணாகும். [1] இவை, சில இருபரிமாண கூடமைப்புப் பாதைகளை என்ணுகின்ற 'டெலன்னாய் எண்'களின் சிறப்பு வகையாக அமைகின்றன[2] 'அவுய் எண்முக எண்'களென பிரெஞ்சு போதகரும் கனிமவியலாளருமான 'ரெனே ஜஸ்த் அவுய்' என்பாரின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

வாய்பாடு

  • ஆதிப்புள்ளியிலிருந்து n படிகளுக்குள் அமையும் முப்பரிமாண கூடமைப்புப் புள்ளிகளின் எண்ணிக்கை கீழ்வரும் வாய்பாட்டால் தரப்படுகிறது. அதாவது n ஆவது மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்ணுக்கான வாய்பாடு:
(2n+1)(2n2+2n+3)3
  • மையப்படுத்தப்பட்ட எண்முக எண்களில் முதலிலமையும் சில (n = 0, 1, 2, ...):
1, 7, 25, 63, 129, 231, 377, 575, 833, 1159, ...[3]
  • மையப்படுத்தப்பட்ட எண்முக எண்களின் 'பிறப்பிக்கும் சார்பு':[3][4]
(1+x)3(1x)4.
C(n)=C(n1)+4n2+2.
  • அடுத்தடுத்து வரும் எண்முக எண் சோடிகளின் கூட்டுத்தொகையாக மையப்படுத்தப்பட்ட எண்முக எண்களைப் பெறலாம்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:வடிவ எண்கள்