ரீடு வினை

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

ரீடு வினை (Reed reaction ) என்பது ஒளியின் உதவியைக் கொண்டு நீரகக்கரிமத்தை சல்போனைல் குளோரைடுகளாக ஆக்சிசனேற்றம் செய்யும் வினை முறையாகும். ஒரு தனி உறுப்பின் வழியாக நிகழும் இந்த ஒளிவேதியியல் உருமாற்ற வினையே ரீடு வினை அல்லது ரீடு செயல்முறை எனப்படுகிறது.

வினையின் முதல்படியில் குளோரின் மூலக்கூறு, ஒளியின் உதவியுடன் சம பிளவாகப் பிரிகையடைகிறது. பின்னர் உருவாகும் குளோரின் அணு நீரகக்கரிம வளையத்தைத் தாக்கி ஐதரசன் குளோரைடை உருவாக்கி இதன் விளைவாக ஆல்க்கைல் தனி உறுப்பு உண்டாகிறது. அதைத் தொடர்ந்து மைய உலோக அணுவுடன் எலக்ட்ரான் வழங்கும் தன்மை கொண்ட பிணைப்புகளை SO2 அயனிகள் ஏற்படுத்துகின்றன. இதனால் சல்போனைல் தனிஉறுப்புகள் உருவாகின்றன. இறுதியாக இவை குளோரின் அணுக்களைத் தாக்கி சல்போனைல் குளோரைடுகளைத் தருகின்றன. புதியதொரு குளோரின் அணு மூலம் சங்கிலி வினை அல்லது தொடர் வினை தொடர்கிறது.

The Reed reaction
The Reed reaction

தொடர்வினையின் தொடக்கம்

Cl2hν2Cl

தொடர்வினையின் வளர்ச்சிப் படிகள்:

RH+ClR+HCl
R+:SO2RS˙O2
RS˙O2+Cl2RSO2Cl+Cl

வினையில் உருவாகும் சல்போனைல் குளோரைடுகள் பரவலாக துப்புரவாக்கிகள் தொழிற்சாலைகளில் தாதுப்பொருளாக உபயோகமாகின்றன. குறிப்பிட்ட சில சூழல்களில் (40–80 °செ) ஆல்க்கேன்களின் குளோரினேற்றம் மட்டுமே நிகழ்கின்றன.

RH+SO2Cl2 RCl+SO2+HCl

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ரீடு_வினை&oldid=1080" இலிருந்து மீள்விக்கப்பட்டது