ருத்தேனியம்(III) நைட்ரேட்டு
Jump to navigation
Jump to search
ருத்தேனியம்(III) நைட்ரேட்டு (Ruthenium(III) nitrate) என்பது Ru(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ருத்தேனியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
ருத்தேனியம்(III) நைட்ரேட்டு தண்ணீரில் கரையும்.Ru(NO3)3*6H2O என்ற வாய்ப்பாடு கொண்ட படிகநீரேற்றாக மஞ்சள் நிறப்படிகங்களாக உருவாகிறது.
வேதிப் பண்புகள்
கார்பனோராக்சைடு சூழலில் சிலிக்கன் ஆக்சைடுடன் ருத்தேனியம்(III) நைட்ரேட்டு வினையில் ஈடுபட்டு Ru(CO)2(OSi)2, Ru(CO)3(OSi)2</chem>, அல்லது Ru3(CO)12</chem> என்ற சேர்மங்களில் ஒன்றாக உருவாகிறது.[1]
பயன்கள்
ருத்தேனியம்(III) நைட்ரேட்டு சேர்மத்தைப் பயன்படுத்தி ருத்தேனியம்-கார்பன் வினையூக்கிகளைத் தயாரிக்கிறார்கள்.[2]