லியுதேத்தியம் பாசுபைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

லியுதேத்தியம் பாசுபைடு (Lutetium phosphide) என்பது LuP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] லியுத்தேத்தியமும் பாசுபரசும் சேர்ந்து வினைபுரிந்து லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது. கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் இது தண்ணீரில் கரையாது.

தயாரிப்பு

லியுத்தேத்தியத்தை சிவப்பு பாசுபரசுடன் சேர்த்து மந்த வாயுச் சூழலில் சூடுபடுத்தினால் லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது.

Lu+PLuP

லியுத்தேத்தியத்தை பாசுபீனுடன் சேர்த்து வினைப்படுத்தினாலும் இச்சேர்மம் உருவாகிறது.

இயற்பியல் பண்புகள்

F m3m என்ற இடக்குழுவில் a = 0.5533 nm, Z = 4 என்ற அலகுக் கூடுகளுடன் கருப்பு நிறத்தில் கனசதுரப் படிகங்களாக லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது.[3]

காற்றில் நிலைப்புத்தன்மையுடன் உள்ளது. தண்ணீரில் கரையாது. நைட்ரிக் அமிலத்துடன் தீவிரமாக வினைபுரிகிறது.

பயன்கள்

சீரொளி இருமுனையங்களில், உயர் அலைவரிசை பயன்பாடுகளில், உயர் மின்னளவுகளில் இது குறைக்கடத்தியாகப் பயன்படுகிறது.[4]

கதிர்வீச்சை உறிஞ்சும் திறன் காரணமாக காமா கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist