வட்டு (கணிதம்)

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
வட்டின் வார்ப்புரு:Legend-line வார்ப்புரு:Legend-line வார்ப்புரு:Legend-line வார்ப்புரு:Legend-line

வடிவவியலில் வட்டு (disk அல்லது disc[1]) என்பது, தளத்தில் வட்டமொன்றால் அடைபடும் பகுதியைக் குறிக்கும். எல்லையாகவுள்ள வட்டத்தையும் சேர்த்துக்கொண்டால், அவ்வட்டானது "மூடிய வட்டு" எனவும், சேர்த்துக்கொள்ளாவிட்டால் "திறந்த வட்டு" எனவும் அழைக்கப்படும்.[2]

வழக்கமாக, r ஆரமுள்ள திறந்த வட்டு Dr எனவும், மூடிய வட்டு Dr எனவும் குறியிடப்படுகின்றன. எனினும் இடவியலில் D2 திறந்த வட்டு IntD2 என்றும், மூடிய வட்டு D2 எனவும் குறிக்கப்படுகின்றன.

வாய்பாடுகள்

காட்டீசியன் ஆள்கூற்று முறைமையில்,

(a,b) மையமும் R ஆரமுங்கொண்ட திறந்த வட்டின் சமன்பாடு:[1]

D={(x,y)2:(xa)2+(yb)2<R2}

(a,b) மையமும் R ஆரமுங்கொண்ட மூடிய வட்டின் சமன்பாடு:

D={(x,y)2:(xa)2+(yb)2R2}.

R ஆரமுள்ள மூடிய வட்டின் பரப்பளவு: πR2 [3]

பண்புகள்

  • வட்டானது வட்டச் சமச்சீர் உடையது.[4]
  • திறந்த வட்டும் மூடிய வட்டும் இடவியலாக சமானமானவை அல்ல. அதாவது உருவொத்தவையல்ல. அவற்றின் இடவியல் பண்புகள் மாறுபட்டவை.[5] இருப்பினும் இரண்டும் பொதுவான சில பண்புகளையும் கொண்டுள்ளன.[6]
எடுத்துக்காட்டாக:
f(x,y)=(x+1y22,y) என்ற சார்பு, திறந்த அலகு வட்டின் ஒவ்வொரு புள்ளியையும் அதே திறந்த அலகு வட்டின் ஒரு புள்ளியோடு இணைக்கிறது. ஆனால் மூடிய அலகு வட்டில், அதன் வரம்பு அரைவட்டத்தின் (x2+y2=1,x>0.) மீதமையும் ஒவ்வொரு புள்ளியையும் நிலைத்த புள்ளியாகக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

  1. 1.0 1.1 வார்ப்புரு:Citation.
  2. வார்ப்புரு:Citation.
  3. வார்ப்புரு:Citation.
  4. வார்ப்புரு:Cite book
  5. வார்ப்புரு:Citation.
  6. வார்ப்புரு:Citation.
  7. In higher dimensions, the Euler characteristic of a closed ball remains equal to +1, but the Euler characteristic of an open ball is +1 for even-dimensional balls and −1 for odd-dimensional balls. See வார்ப்புரு:Citation.
  8. வார்ப்புரு:Harvtxt, p. 132.
  9. வார்ப்புரு:Harvtxt, Ex. 1, p. 135.
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=வட்டு_(கணிதம்)&oldid=1749" இலிருந்து மீள்விக்கப்பட்டது