வில்லியம் ஹக்கின்ஸ்
சர் வில்லியம் அகின்சு (Sir William Huggins) OM, KCB, ( பிப்ரவரி 7, 1824 – மே 12, 1910) ஓர்ஆங்கிலேய வானியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.[1] சூரியனில் உள்ளதைப் போலவே விண்மீன்களிலும் வேதியல் தனிமங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தவர்.[2] சிரியசு என்னும் விண்மீன் நொடிக்கு 47 கி. மீ வேகத்தில் விலகிச் செல்வதைக் கண்டுபிடித்துக் கூறியதன் மூலம் விண்மீன்களின் இயக்க வேகத்தை முதன்முதலில் உறுதி செய்தவர்.[3].
வாழ்க்கை

வில்லியம் அகின்சு 1824 இல் இலண்டன் மாநகரத்தின் கார்ன்கில் பகுதியில் பிறந்தார். இவர்1875 இல் தபுளின் பகுதி ஜான் முரேவின் மகளாகிய மார்கரெட் இலிண்டுசேவை மணந்தார். இவரது இணையரான மார்கரெட்டுக்கும் வானியலிலும் அறிவியலிலும் ஈடுபாடும் ஆர்வமும் இருந்துள்ளது.மார்கரெட் அகின்சு கணவரின் ஒளிப்படவியல் ஆர்வத்தைத் தூண்டி, அவரது பணிகளை முறைப்படுத்துவதில் அக்கறை காட்டியுள்ளார்.
அகின்சு, இலண்டனில் உள்ள துல்சே மலை மேற்பகுதியில் தனியார் வான்காணகம் ஒன்றை நிறுவினார். இவரும் இவரது மனைவியும் பல்வேறு வான்பொருள்களின் கதிர்நிரல் உமிழ்வுக் கோடுகளிலும் உட்கவர்வுக் கோடுகளிலும் விரிவான ஆராய்ச்சியும் நோக்கீடுகளும் மேற்கொண்டனர். இவர் 1864 ஆகத்து, 29 இல் முதன்முதலாக புபஆ 6543 விண்மீன் தொகுதியை ஆயும்போது கோளாக்க ஒண்முகிலின் கதிர்நிரலை எடுத்தார். இவர் தான் முதன்முதலாக ஒண்முகில்களையும் பால்வெளிகளையும் வேறுபடுத்தும் முறையை கண்டறிந்தார். ஒண்முகில்களின் கதிர்நிரல் வளிமங்களினதைப் போல உமிழ்வுக் கதிர்நிரலாக அமைய, பால்வெளிகளின் கதிர்நிரல் விண்மீன்களைப் போல அமைதலை வெளிப்படுத்தினார். இவருடன் கதிர்நிரல் ஆய்வில் இவரது அணுக்க வேதியியலாளரான வில்லியம் ஆல்லன் மில்லரும் கலந்துகொண்டார். இவர் தான் வான்பொருள்களைப் படமெடுத்து ஆய்வதில் முதலில் உலர்தட்டு ஒளிப்படவியலைப் பயன்படுத்தியுள்ளார்.[1]
சீரியசு விண்மீன் தொகுதியை நோக்கீடுகள் செய்தபோது அதன் கதிர்நிரலில் அமைந்த செம்பெயர்ச்சியைக் கண்டு, இப்பெயர்ச்சியைக் கொண்டு அதன் ஆர விரைவைக்(திசைவேகத்தைக்) கணிக்கலாம் எனும் கருதுகோளை முன்வைத்தார். [4]
அகின்சு வில்லியம் ஆல்லன் மில்லருடன் இணைந்து, 1867 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தை வென்றார். பிறகு இவர் 1876 இல் இருந்து 1878 வரை அரசு வானியல் கழகத் தலைவராக விளங்கினார்; இவர் மறுபடியும் தனியாக 1885 இல் மீண்டும் அரசு வானியல் க்ழகப் பொற்பதக்கத்தைப் பெற்றார். இவர் அரசு வானியல் கழகத்தின் அலுவலராக, 37 ஆண்டுகள், வேறு எவரும் பணிபுரியாத அளவு நீண்ட காலத்துக்குப் பணிபுரிந்துள்ளார்.[5]
இவர் 1865 இல் அரசு கழகத்து ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அக்கழகம் இவருக்கு அரசு பதக்கம் (1866), உருபோர்டு பதக்கம் (1880), கோப்ளே பதக்கம் (1898) ஆகிய விருதுகளை வழங்கியது. இவர் 1885 இல் பேக்கரிய விரிவுரை ஆற்றியுள்ளார். மேலும், இவர் 1900 முதல் 1905 வரை அரசு கழகத் த்லைவராகவும் இருந்துள்ளார். குறிப்பாக, 1904 ஆம் ஆண்டைய இவரது தலைமையுரையில் ஆய்வுறுப்பினர்களை வாழ்த்தி, அவ்வாண்டுக்கான பரிசுகளை வழங்கியுள்ளார்.[6]
இவர் 1910 இல் செய்த குடற்பிதுக்க அறுவைக்குப் பிறகு தன்வீட்டில் இறந்தார்; கோல்டெர்சு கிரீன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
தகைமைகளும் விருதுகளும்
விருதுகள்
- அரசு பதக்கம் (1866)
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், வில்லியம் ஆலன் மில்லருடன் இணைந்து 1867, தான் மட்டும் 1885)
- உரூரிபோர்டு பதக்கம் (1880)
- வால்சு பரிசு (1882)[7]
- உறுப்பினர், சுவீடிய அறிவியல் கல்விக்கழகம் (1883)
- பாத் கட்டளையாணை மாவீரர் பட்டம் (1897)[8]
- கோப்ளே பதக்கம் (1898)
- என்றி திரேப்பர் பதக்கம், அமெரிக்க அறிவியல் கல்விக்கழகம் (1901)[9]
- தகைமை ஆணை]] (1902)
- புரூசு பதக்கம் (1904)
இவர் நினைவாகப் பெயரிடப்பட்டவை
- அகின்சு (நிலாக் குழிப்பள்ளம்)
- அகின்சு (செவ்வாய்க் குழிப் பள்ளம்)
- சிறுகோள் 263 அகின்சு
நூல்தொகை

- 1870: கதிர்நிரல் பகுப்பாய்வும் வான்பொருட்களில் அவற்றின் பயன்பாடும். மான்செசுட்டர், ( மக்களுக்கான அறிவியல் விரிவுரைகள்; தொடர் 2 உம் 3 உம்)
- 1872: (editor) கதிர்நிரலியலின் பயன்பாடு, புவிப்பொருள்கள், வானபொருட்களின் புறநிலைக் கட்டமைப்பு ஆய்வு எச். சுசெலன், , மொழிபெயர்ப்பு ஜேன், கரோலி இலாசல்,HathiTrust உடன் இணைப்பு.
- 1899: (சீமாட்டி மார்கரெட் இலிண்டுசே அகின்சுடன் இணைந்து): விண்மீன்களின் படிமலர்ச்சி ஒழுங்கில், கதிர்நிரல் விளக்கமும் வான்காணகத்தின் குறும் வரலாறும் அமைந்த4870 to 3300 வான்பொருட்களின் உடுக்கணக் கதிர்நிரல் அட்டவணை. இலண்டன், (வில்லியம்அகின்சு வான்காணக வெளியீடுகள், தொகுதி 1)
- 1906: அரசு கழகம், அல்லது, அரசிலும் பள்ளிகளிலும் அறிவியல். இலண்டன்.
- 1909: சர் வில்லியம் அகின்சின் அறிவியல் ஆய்வுரைகள்; edited by Sir William and Lady Huggins. இலண்டன், ( வில்லியம் அகின்சு வான்காணக வெளியீடுகள், தொகுதி 2)
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Huggins, Sir William (1824–1910) Barbara J. Becker, Oxford Dictionary of National Biography, 2004 (subscription required)
- Audio description of Huggins' work
- Eclecticism, Opportunism, and the Evolution of a New Research Agenda: William and Margaret Huggins and the Origins of Astrophysics Barbara J. Becker
- ↑ 1.0 1.1 வார்ப்புரு:Citation
- ↑ வார்ப்புரு:Citation
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ Wm Huggins (30 November 1904) Huggins Presidential Address, link from Internet Archive
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite web