வெளிப்பாடு (ஒளிப்படவியல்)

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
தென் மற்றும் வட விண்வெளி துருவங்களை சுற்றி சுழலும் நட்சத்திரங்கள் காட்டும் ஒரு நீண்ட வெளிப்பாடு. கடன்: ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வகம்
வெளிப்பாடு 15 விநாடிகளில், காலம்: சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு, கடற்பாறைகளில் இருந்து பனி வடிகிறது போல் தோன்றுகிறது.

ஒளிப்படவியலில், வெளிப்பாடு (exposure) என்பது ஓர் ஒளிப்படம் எடுக்கும் போது அந்த ஊடகத்தின் (படச்சுருள் அல்லது ஒளிஉணரி) மீது விழும் மொத்தஒளியின் அளவு ஆகும். வெளிப்பாடு லக்சு நொடிகளில் அளவிடப்படுகிறது, இது குறிப்பிட்ட பகுதியின் மேல் வெளிப்பாடு மதிப்பு (EV) மற்றும் காட்சி ஒளிர்வில் இருந்து கணக்கிடப்படுகிறது.

புகைப்பட மொழியில், வெளிப்பாடு பொதுவாக ஒரு ஷட்டர் சுழற்சியை குறிக்கிறது. உதாரணமாக: நீண்ட வெளிப்பாடு, போதுமான குறைந்த செறிவு ஒளியை கைப்பற்ற ஒற்றை, நீடித்த ஷட்டர் சுழற்சியை குறிக்கிறது, அதேவேளை பல்வெளிப்பாடு ஓர் ஒளிப்படத்தை உருவாக்க இரண்டு அல்லது மேற்பட்ட தனி வெளிப்பாடுகளை அதன் மேல் பதித்தலை குறிக்கிறது. ஒரே படச்சுருள் வேகத்திற்கு, திரட்டப்பட்ட ஒளிஅளவை வெளிப்பாடு (H) இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.

ஒளிஅளவை மற்றும் கதிர்ப்புஅளவை வெளிப்பாடு

ஒளிஅளவை அல்லது ஒளிரும் வெளிப்பாடு[1] ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டு நேரத்தில் குறித்த மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற கட்புல ஒளிஆற்றலின் (ஒளிர்வு சார்பு(luminosity function) மூலமாக எடையிடப்பட்ட) மொத்த இயற்பியல் அளவு என வரையறுக்கப்படுகிறது:[2]

H=Et

அங்கு

  • H (லக்ஸ் நொடிகளில் (lux.sec) வழக்கமாக) ஒளிரும் வெளிப்பாடு
  • E உரு-மேற்பரப்பு ஒளிர்வு (பொதுவாக லக்ஸ்(lux) இல்)
  • t வெளிப்பாடு நேரம் (வினாடிகளில்)

சரியான வெளிப்பாடு

"சரியான" வெளிப்பாடு என்பது புகைப்படக்கலைஞரின் நோக்கம் விளைவை அடைகிறது என்பதற்கான வெளிப்பாட்டை கருதலாம்.[3]

அதி வெளிப்பாடு,மற்றும் குறைவெளிப்பாடு

வெள்ளை நாற்காலி: அழகுணர்ச்சி தேவைகளுக்காக திட்டமிடபட்ட அதி வெளிப்பாடு..

ஓர் ஒளிப்படத்தின் முக்கிய பகுதிகள் அதிஉயர் பிரகசமாகவோ அல்லது வெள்ளை அடிக்கப்பட்டிருந்தால் அப்படம் அதி வெளிப்பாட்டிற்கு உட்பட்டது எனப்படும். [4]. ஓர் ஒளிப்படத்தின் முக்கியமான பகுதிகள் இருண்டதாக அல்லது நிழல் பட்டதாக இருந்தால் அப்படம் குறை வெளிப்பாடிற்கு உட்பட்டது எனப்படும்.[5]

ஓர் ஒளிப்படத்தின் சரியான வெளிப்பாடு ஒரு காட்சியைப் படம் எடுக்கையில் ஒளிப்படக்கருவியின் உள்விழும் ஒளியின் அளவில் உள்ளது, ஒளிப்படக் கருவி பெறும் ஒளியின் அளவு அதன் நுண்துளையின் அளவு, அது திறந்து மூட எடுக்கும் நேரம், ஒளிப்பட உணரியின் உணர்தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது.

இரவு படபிடிப்பில் வெளிப்பாட்டின் விளைவு: நீண்ட ஷட்டர் வேகம் வெளிப்பாட்டை அதிகரிக்கிறது

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:ஒளிப்படவியல்