வெள்ளி டங்சுடேட்டு
வெள்ளி டங்சுடேட்டு (Silver tungstate) Ag2WO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். ஒளி ஒளிர்வு, பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கை, ஓசோன் வாயு உணரிகள் மற்றும் ஈரப்பத உணரிகள் போன்ற பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.[1][2] மின்னணு மற்றும் இரசாயனத் தொழில்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் பேரளவு புரதக்கல்வி ஆராய்ச்சியிலும் வெள்ளி டங்சுடேட்டு பயன்படுத்தப்படுகிறது.[3]
தோற்றம்
வெள்ளி டங்சுடேட்டு மூன்று பல்லுருவத் தோற்றங்களில் உருவாகிறது.[1] நேர்சாய்சதுரம் (α), அறுகோணம் (β) மற்றும் கனசதுரம் (γ) என்பவை அம்மூன்று நிலைகளாகும். α-வெள்ளி டங்சுடேட்டு வெப்ப இயக்கவியல் ரீதியாக நிலையானதாக உள்ளது. அதே சமயம் β- மற்றும் γ- வெள்ளி டங்சுடேட்டுகள் சிற்றுறுதி நிலையில் உள்ளன.[4]
தயாரிப்பு
வெள்ளி நைட்ரேட்டுடன் சோடியம் டங்சுடேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் வெள்ளி டங்சுடேட்டு உற்பத்தியாகிறது. சோடியம் நைட்ரேட்டு ஓர் உடன்விளைபொருளாக கிடைக்கிறது:[1]