வேதியியல் மாற்றியங்களின் கணிதக் கணிப்பு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வேதியியல் மாற்றியங்களின் கணிதக்கணிப்பு (Mathematical Enumeration of Chemical Isomers)

1875 இல் முதன் முதல் கெய்லி என்னும் கணிதவியலாளர் வேதியியலைச் சார்ந்த மாற்றியங்களை எண்ணும் முறைகளைத் தொடங்கி வைத்தார். ஒரு குறிப்பிட்ட கரிமத்தைச் சார்ந்த ஓர் அல்கேனின் (Alkane) மாற்றியங்களின் எண்ணிக்கை அதைவிட ஒரு கரிமம் குறைவாகவுள்ள ஒர் அல்கேனின் மாற்றியங்களைப்பொருத்தது என்று கண்டுகொண்டார். இந்த உண்மையையும், கணிதத்தைச் சேர்ந்த கோலநூலைக்கொண்டும், 13 கரிமங்கள் வரை உள்ள அல்கேன்களின் மாற்றியங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டார்.

ஆனால் அவர் கணிப்பில் C12H26,C13H28 இரண்டினுடைய கணிப்புக்கள் தவறானவையாக இருந்தன. ஐந்தாண்டுகளுக்குப்பிறகு ஹெர்மன் என்பவர் அவைகளைத் திருத்தினார். ஆனால் அவருடைய கணிப்புகளும் அதற்குமேல் எண்ணிக்கையுள்ள கரிமங்களைச் சார்ந்த அல்கேன்களின் மாற்றியங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட உதவவில்லை.[1]

1890 களில் லொஸானிட்ச் என்பவர் சேர்வியல் முறைகளைப்பயன்படுத்தி இக்கணிப்பை C14H30 வரையில் கொண்டு சென்றார். அவருடைய கணிப்பிலும் C12H26,C14H30 இரண்டும் தவறானவையாக முடிந்தன.

1930களில் போல்யா என்ற கணிதவியலர் ஒரு அற்புதமான தேற்றத்தை உருவாக்கினார்.அவருடைய தேற்றத்தைப் பயன்படுத்தி பலபன் என்பவர் C20H42 வரையில் அல்கேன்களுடைய சமதானிகளைக் கணக்கிட்டார். போல்யாவின் தேற்றம் இன்றும் சேர்வியலில் ஒரு மிகவும் பயனுள்ள முக்கியமான தேற்றமாகத் (போல்யா எண்ணெடுப்புத் தேற்றம்) திகழ்கிறது.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்