வைப்பீன் தீவு
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Unreferenced வைப்பீன் தீவு (Vypin) ஒரு தீவாகும். இது கேரளாவில் உள்ள கொச்சி நகரத்தினைச் சேர்ந்ததாகும். இந்தத் தீவு சுமார் 27 கிலோமீட்டர் ( மைல்) பரப்பளவினைக் கொண்டதாகும். இது கோசீரீ பாலங்கள் மூலம் கொச்சி நகரத்தினை இணைக்கிறது.
வரலாறு
வைப்பீன் தீவு 1341ல் பெரும் வெள்ளத்திற்கு பின்னர் உருவான ஓரு தீவாகும். இந்தத் தீவில் போர்த்துகேயர்களால் கி.பி. 1503 இல் கட்டபட்ட பள்ளிபுரம் கோட்டை உள்ளது. பள்ளிபுரம் கத்தோலிக்க தேவாலயம் ஒரு புனித தலமாக உள்ளது. இந்த வைப்பின் தீவில் மற்றோரு சுவாரசியமாக உள்ளது சீன வலை எனப்படும் வித்தியாசமான மீன்பிடி வலை ஆகும்.
சுற்றுலா சிறப்புகள்
- வைப்பீன் தீவின் மேற்கு கரையோரத்தில் கொச்சி நகரத்தின் நீளமான கடற்கரைகளை பெற்றுள்ளது. இவை முறையே சேரை கடற்கரை, குழுப்பிள்ளி கடற்கரை மற்றும் புதுவிப்பி கடற்கரை ஆகும்.
- கேரளாவில் பத்து கலங்கரை விளக்கம் உள்ளன இதில் ஒன்று வைப்பின் கடற்கரையில் அமைந்துள்ளது.
- இங்கு உள்ள பள்ளிபுரம் கோட்டை இந்தத் தீவில் 1503ல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது.
படங்கள்
-
வைப்பீன் தீவில் உள்ள மீன்பிடி படகுகள்.
-
வைப்பீன் தீவில் உள்ள எல்என்ஜி முனையத்தில் சூரியன் மறையும் காட்சி