2 (எண்)
Jump to navigation
Jump to search
இரண்டு (வார்ப்புரு:Audio) (Two) என்பது தமிழ் எண்களில் ௨ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] இரண்டு என்பது ஒன்றிற்கும் மூன்றிற்கும் இடைப்பட்ட ஓர் இயற்கை எண்ணாகும்.

காரணிகள்
இரண்டின் நேர்க் காரணிகள் 1, 2 என்பனவாகும்.[2]
இயல்புகள்
- இரண்டு ஓர் இரட்டை எண்ணாகும்.
- இரண்டை இரு வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- இரண்டு மூன்றாவது பிபொனாச்சி எண்ணாகும்.
- இரண்டு இரண்டாவது கேட்டலான் எண்ணாகும்.
- இரண்டு இரண்டாவது பெல் எண்ணாகும்.
- இரண்டு ஒரு சோவி செருமானிய முதன்மை எண் ஆகும். ஏனெனில், என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.[3]