6-மெத்தில்சாலிசிலிக் அமிலம்
6-மெத்தில்சாலிசிலிக் அமிலம் (6-Methylsalicylic acid) என்பது CH3C6H3(CO2H)(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.ஒரு வெண்மையான திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. கார நீரிலும் கரிம முனைவுக் கரைப்பான்களிலும் 6-மெத்தில்சாலிசிலிக் அமிலம் கரைகிறது. நடுநிலை pH மதிப்புள்ள நிலையில் இந்த அமிலம் 6-மெத்தில்சாலிசிலேட்டாக காணப்படுகிறது. ஒரு கார்பாக்சிலிக் அமிலம், மற்றும் ஒரு பீனால் குழு போன்றவை இதனுடைய வேதி வினைக்குழுக்களில் அடங்கும். மெத்தில்சாலிசிலிக் அமிலத்தினுடைய அறியப்பட்ட நான்கு மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும்.
6-மெத்தில்சாலிசிலிக் அமிலம் இயற்கையாகத் தோன்றுகிறது. மெட்டா கிரெசால் தயாரிப்பில் உயிரியல் தொகுப்பு முன்னோடிச் சேர்மமாக 6-மெத்தில்சாலிசிலிக் அமிலம் பயன்படுகிறது[1]. கார்பாக்சில் நீக்க வினையில் 6-மெத்தில்சாலிசிலேட்டு டி கார்பாக்சிலேசு என்ற நொதி வினையூக்கியாகச் செயல்படுகிறது.
- 6-மெத்தில்சாலிசிலேட்டு 3-கிரெசால் + CO2