Testwiki:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 18, 2009

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வடமுனை ஒளி (Auroras, அல்லது northern and southern (polar) lights) என்பது வடதுருவத்தை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒளியின் அபூர்வத் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றம் உலகம் தோன்றிய காலம்தொட்டே காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒளித்தோற்றத்துக்குரிய அறிவியற் பெயர் Aurora Borealis Celestial Phenomenon என்பதாகும். இதே போன்ற அபூர்வ ஒளித் தோற்றம் தெற்கு துருவத்தை அண்மிய பகுதிகளில் தெரிவதை "தென்முனை ஒளி" என்பர். இதை இயற்கையின் வாணவேடிக்கை என்று சொல்லலாம். இருண்ட வானத்தின் குறுக்காக, நிலையற்று ஆடும் ஒளியாலான திரைச் சீலையின் நடனம் போன்று இது காணப்படுவதாக, கற்பனையால் மெருகூட்டிச் சொல்லலாம்.


கணிதத்தில் நேரியல் இயற்கணிதப் பிரிவில் நேரியல் சார்பின்மையும் (Linear independence) நேரியல் சார்புடைமையும் (Linear dependence) அடிப்படைக் கருத்துகள். V என்ற திசையன் வெளி யில் S={u1,u2,...,un} என்ற திசையன்களின் கணம் நேரியல் சார்புடையது என்பதற்குப் பொருள், அவைகளில் ஏதாவதொன்று மற்றவைகளின் நேரியல் சேர்வு என்பதே. எடுத்துக்காட்டாக, V3 இல் {(1,0,0), (1,2,-3), (0,1,-3/2)} என்ற கணம் நேரியல் சார்புடையது. ஏனென்றால், (1,2,-3) = 1(1,0,0) + 2(0,1,-3/2). S இல் எதுவுமே மற்றவைகளின் நேரியல் சேர்வாக இல்லையானால், அது நேரியல் சார்பின்மை என்ற பண்பை உடையது அல்லது நேரியல் சார்பற்றது எனப்படும். எடுத்துக்காட்டாக, V3 இல் {(1,1,0), (1,0,1), (0,1,1)} என்ற கணம் நேரியல் சார்பற்றது.