அரைமுப்படிப் பரவளைவு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Mvar இன் வெவ்வேறு மதிப்புகளுக்கு அரைமுப்படிப் பரவளைவு.

கணிதத்தில், அரைமுப்படிப் பரவளைவு , அரைக்கனவடிவப் பரவளைவு அல்லது நுதிக்குரிய கனவடிவடிம் (semicubical parabola, cuspidal cubic) என்பது உள்ளுறைச் சமன்பாடுடையதொரு இயற்கணிதத் தள வளைவரையாகும். அதன் உள்ளுறைச் சமன்பாடு காட்டீசியன் ஆள்கூற்று முறைமைகளில்: y2a2x3=0 (வார்ப்புரு:Math).

வார்ப்புரு:Mvar -க்குத் தீர்வு காண, அதன் "வெளிப்படை வடிவச் சமன்பாடு" கிடைக்கிறது.

y=±ax32,. இதிலிருந்து ஒவ்வொரு மெய்யெண் புள்ளியும்

வார்ப்புரு:Math என்பதை நிறைவுசெய்யும் என்பதையும், சமன்பாட்டிலுள்ள வார்ப்புரு:Math இன் அடுக்கானது இவ்வளைகோட்டிற்கான பெயரிலுள்ள "அரைமுப்படி" என்பதற்கானக் காரணத்தையும் அறியலாம்.(பரவளைவின் சமன்பாடு: வார்ப்புரு:Math.)

உள்ளுறைச் சமன்பாட்டை வார்ப்புரு:Mvar -க்குத் தீர்வு காண இரண்டாவதாக ஒரு வெளிப்படைச் சமன்பாடு கிடைக்கிறது:

x=(ya)23.

t=yax. என உள்ளுறை சமன்பாட்டில் பதிலிடுவதன் மூலம் அரைமுப்படிப் பரவளைவிற்குப் பின்வரும் துணையலகுச் சமன்பாட்டையும் பெறலாம்:[1]

x=t2,y=at3

ஆங்கிலக் கணிதவியலாளர் வில்லியம் நெயில் என்பவர் இவ்வளைகோட்டின் வில்லின் நீளத்தைக் கணக்கிட்டு, 1657 இல் வெளியிட்டார்.[2]

பண்புகள்

வடிவொப்புமை

(t2,at3) -துணையலகு உருவகிப்பைக் கொண்ட எந்தவொரு அரைமுப்படிப் பரவளைவும் வார்ப்புரு:Nowrap என்ற அரைமுப்படி அலகு பரவளவுடன் வடிவொத்ததாக இருக்கும்.

நிறுவல்: (x,y)(a2x,a2y) என வரையறுக்கப்பட்ட வடிவொப்புமையானது (சீரான அளவுமாற்றம், (t2,at3) என்ற அரைமுப்படிப் பரவளைவை முழுவதுமாக ((at)2,(at)3)=(u2,u3) (வார்ப்புரு:Nowrap) என்ற வளைவரையோடு இணைக்கிறது.

தொடுகோடுகள்

y=±x3/2 என்ற அரைமுப்படிப் பரவளைவின் கார்ட்டீசியன் சமன்பாட்டை வளைவரையின் மேற்கிளையிலுள்ள புள்ளி (x0,y0) இல் வகையிட, அப்புள்ளியிலமையும் தொடுகோட்டின் சமன்பாடு கிடைக்கும்:

y=x02(3xx0).

இத்தொடுகோடு வளைவரையின் கீழ்க்கிளையைப் பின்வரும் ஒரேயொரு புள்ளியில் சந்திக்கும்:[3]

(x04,y08).

வில்லின்நீளம்

(x(t),y(t)) என்ற வளைவரையின் வில்லின் நீளத்தைப் பின்வரும் தொகையிடல் மூலம் காணலாம்:

x(t)2+y(t)2dt.

அரைமுப்படிப் பரவளைவு (t2,at3),0tb, இன் வில்லின் நீளம்:

0bx(t)2+y(t)2dt=0bt4+9a2t2dt==[127a2(4+9a2t2)32]0b.

( வார்ப்புரு:Nowrap

எடுத்துக்காட்டு: வார்ப்புரு:Math (அரைமுப்படி அலகு பரவளைவு) மற்றும் வார்ப்புரு:Math எனில், பரவளைவின் மீதுஅமையும் (0, 0), (4,8) ஆகிய இரு புள்ளிகளை இணைக்கும் வில்லின் நீளம் 9.073 ஆகக் கிடைக்கும்.

மலரி

(t2,t) என்ற பரவளைவின் மலரியானது மூலப் பரவலைவிலிருந்து x-அச்சு திசையில் 1/2 அளவு நகர்த்தப்பட்ட அரைமுப்படிப் பரவளைவாகும்:

(12+t2,433t3).

கோண-தூர ஆயதொலைவுகள்

(t2,at3) என்ற அரைமுப்படிப் பரவளைவின் உருவகிப்பைப் கோணதூர ஆயதொலைவுகளில் காண்பதற்கு, y=mx என்ற கோடானது அரைமுப்படிப் பரவளைவை வெட்டும் புள்ளியைக் காண வேண்டும். இவை இரண்டும் வெட்டும் புள்ளிகள்:

m0 எனில், (0,0) மற்றும் (m2a2,m3a2).
இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தூரம்: m2a21+m2
m=tanφ, sec2φ=1+tan2φ என்ற பதிலிடலை மேற்கொள்ளக் கிடைப்பது:[4]
r=(tanφa)2secφ,π2<φ<π2.
இதுவே அரைமுப்படிப் பரவளைவின் கோணதூர ஆயதொலைவுகள்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளியிணைப்புகள்

  1. வார்ப்புரு:Citation.
  2. August Pein: Die semicubische oder Neil'sche Parabel, ihre Sekanten und Tangenten ,p.2
  3. August Pein: Die semicubische oder Neil'sche Parabel, ihre Sekanten und Tangenten ,p.26
  4. August Pein: Die semicubische oder Neil'sche Parabel, ihre Sekanten und Tangenten ,p. 10