இலந்தனம் ஐதராக்சைடு
இலந்தனம் ஐதராக்சைடு (Lanthanum hydroxide) என்பது La(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அருமண் தனிமமான இலந்தனத்தின் ஐதராக்சைடு சேர்மமாக இது கருதப்படுகிறது.
தயாரிப்பு
இலந்தனம் நைட்ரேட்டு போன்ற இலந்தனம் உப்புகளின் நீர்த்த கரைசல்களில் அம்மோனியா போன்ற காரத்தைச் சேர்ப்பதன் மூலம் இலந்தனம் ஐதராக்சைடைப் பெறலாம். இது அரை திண்மக்கரைசல் போன்ற வீழ்படிவை உருவாக்குகிறது, இதை காற்றில் உலர்த்தலாம்.[1]
- La(NO3)3 + 3 NH4OH -> La(OH)3 + 3 NH4NO3
மாற்றாக, இலந்தனம் ஆக்சைடுடன் தண்ணீர் சேர்த்து நீரேற்ற வினை மூலம் தயாரிக்கலாம்.[2]
- La2O3 + 3 H2O → 2 La(OH)3
பண்புகள்
இலந்தனம் ஐதராக்சைடு காரப் பொருட்களுடன் அதிகம் வினைபுரிவதில்லை, இருப்பினும் அமிலக் கரைசலில் சிறிது கரையும்.[1] 330 °செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பநிலையில், இது இலந்தனம் ஆக்சைடு ஐதராக்சைடாக (LaOOH) சிதைகிறது, மேலும் சூடாக்கும்போது இலந்தனம் ஆக்சைடாக (La2O3) சிதைகிறது.:[3]
- வார்ப்புரு:Chem2 LaOOH
- 2 LaOOH வார்ப்புரு:Chem2
அறுகோண படிக அமைப்பில் இலந்தனம் ஐதராக்சைடு படிகமாகிறது. படிக அமைப்பில் உள்ள ஒவ்வொரு இலந்தனம் அயனியும் ஒரு முக்கோண பட்டகத்தில் ஒன்பது ஐதராக்சைடு அயனிகளால் சூழப்பட்டுள்ளது.[4]