சதுர முக்கோண எண்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

கணிதத்தில் சதுர முக்கோண எண் அல்லது வர்க்க முக்கோண எண் (Square triangular number) என்பது முக்கோண எண் மற்றும் சதுர எண்ணாகவும் (முழு வர்க்கம்) உள்ள ஒரு வடிவ எண்ணாகும். சதுர முக்கோண எண்ணை முக்கோண சதுர எண் எனவும் அழைக்கலாம். எண்ணிலடங்கா சதுர முக்கோண எண்கள் உள்ளன. அவற்றுள் முதலிலுள்ள சில:

0, 1, 36, 1225, 41616, 1413721, 48024900, 1631432881, 55420693056, 1882672131025 வார்ப்புரு:OEIS.

வாய்ப்பாடுகள்

k -ஆம் சதுர முக்கோண எண், Nk என்க. இதற்குரிய சதுரம் மற்றும் முக்கோணத்தின் பக்கங்கள் முறையே sk, tk எனில்:

Nk=sk2=tk(tk+1)2.

Nk, sk, tk தொடர் வரிசைகள் முறையே, OEIS தொடர் வரிசைகளான வார்ப்புரு:OEIS2C, வார்ப்புரு:OEIS2C, மற்றும் வார்ப்புரு:OEIS2C ஆகும்.

சதுர முக்கோண எண்கள் காண 1778 -ல் ஆய்லர் உருவாக்கிய வாய்ப்பாடு:[1][2]வார்ப்புரு:Rp

Nk=((3+22)k(322)k42)2.

இவ்வாய்ப்பட்டையே வேறுவிதமாக மாற்றியமைக்கக் கிடைப்பது:

Nk=132((1+2)2k(12)2k)2=132((1+2)4k2+(12)4k)=132((17+122)k2+(17122)k).

இதற்குரிய sk மற்றும் tk காணும் வாய்ப்பாடுகள்:[2]வார்ப்புரு:Rp

sk=(3+22)k(322)k42
tk=(3+22)k+(322)k24.

பெல்லின் சமன்பாடு

சதுர முக்கோண எண்களைக் காணும் முறையானது பெல்லின் சமன்பாடாகப் (Pell's equation) பின்வருமாறு மாற்றமடைகிறது:[3]

ஒரு முக்கோண எண்ணின் வடிவம்:

t(t+1)2.

இந்த எண் சதுர எண்ணாகவும் இருந்தால்

t(t+1)2=s2. என்றபடி ஒரு s, இருக்க வேண்டும்.

இதை சற்றே மாற்றியமைக்க:

(2t+1)2=8s2+1,
x=(2t+1); y=2s, எனப் பிரதியிட:
x22y2=1

இச்சமன்பாடு ஒரு பெல்லின் சமன்பாடாகும். இச்சமன்பாடு பெல் எண்களான Pk மூலம் தீர்க்கப்படுகிறது.[4]

x=P2k+P2k1,y=P2k;
sk=P2k2,tk=P2k+P2k112,Nk=(P2k2)2.

மீள்வரு தொடர்புகள்

சதுர முக்கோண எண்கள், அவற்றுக்குரிய சதுரம் மற்றும் முக்கோணங்களின் பக்கங்களுக்கான மீள்வரு தொடர்பு:[5]வார்ப்புரு:Rp[1][2]வார்ப்புரு:Rp

Nk=34Nk1Nk2+2, N0=0 மற்றும் N1=1.
Nk=(6Nk1Nk2)2, N0=1 மற்றும் N1=36.
sk=6sk1sk2, s0=0 மற்றும் s1=1;
tk=6tk1tk2+2, t0=0 மற்றும் t1=1.

பிற பண்புகள்

சதுர முக்கோண எண்கள் எண்ணற்றவை என்பதற்கான நிறுவலை எ. வி. சில்வெஸ்டர் தந்துள்ளார்:[6] n(n+1)/2 என்ற முக்கோண எண் ஒரு வர்க்கம் எனில் மிகப்பெரிய முக்கோண எண்ணும் அவ்வாறே வர்க்கமாக அமையும்:

(4n(n+1))(4n(n+1)+1)2=22n(n+1)2(2n+1)2.

ஒரு சதுர முக்கோண எண்ணைப் பிறப்பிக்கும் சார்பு:[7]

1+z(1z)(z234z+1)=1+36z+1225z2+.

எண் தரவு

k -ன் மதிப்பு அதிகமாக அதிகமாக tk / sk விகிதம் 21.41421 -யும் தொடர்ந்து அமையும் இரு சதுர முக்கோண எண்களின் விகிதம் 17+12233.97056 -யும் நெருங்கும்..

kNksktktk/skNk/Nk1000011111236681.33333363122535491.434.027784416162042881.4117633.9722451413721118916811.4137933.97061648024900693098001.4141433.970567163143288140391571211.4142033.97056

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சதுர_முக்கோண_எண்&oldid=589" இலிருந்து மீள்விக்கப்பட்டது