சின்செல்லின் தேற்றம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
சின்செல்லின் வரைமுறைப்படி, சரியாக நான்கு புள்ளிகளின் வழியாகச் செல்லும் வட்டம்

சின்செல்லின் தேற்றம் (Schinzel's theorem) என்பது போலந்து கணிதவியலாளர் ஆன்திரெசு சின்செல் நிறுவிய தேற்றமாகும்.

தேற்றத்தின் கூற்று:

எடுத்துக்கொள்ளப்பட்ட n என்ற ஒவ்வொரு இயல் எண்ணுக்கும், சரியாக n முழுஎண் புள்ளிகள் வழியாகச் செல்லும் ஒரு வட்டம் இருக்கும்வார்ப்புரு:R.

நிறுவல்

சின்செல் பின்வரும் வரைதல் அமைப்பைக் கொண்டு இத்தேற்றத்தை நிறுவினார்:

n ஒரு இயல் எண்; n=2k எனில் கீழ்வரும் சமன்பாட்டால் வரையறுக்கப்படும் வட்டம் சரியாக n புள்ளிகள் வழியாகச் செல்லும்:வார்ப்புரு:R

(x12)2+y2=145k1.

இந்த வட்டத்தின் ஆரம் 5(k1)/2/2; மையம் (12,0). எடுத்துக்காட்டாக படத்தில், 5 ஆரமுள்ள வட்டம் நான்கு முழுஎண் புள்ளிகள் வழியாகச் செல்வதைக் காட்டப்பட்டுள்ளது..

n ஒற்றை எண்; n=2k+1 எனில் கீழுள்ள சமன்பாடு வரையறுக்கும் வட்டம் சரியாக n புள்ளிகள் வழியாகச் செல்லும்:வார்ப்புரு:R

(x13)2+y2=1952k.

இந்த வட்டத்தின் ஆரம் 5k/3; மையம் (13,0).

இம்முறையில் பெறப்பட்ட வட்டங்கள் கிடைக்கக்கூடிய வட்டங்களில் மிகச் சிறியவையானவை அல்லவார்ப்புரு:R; எனினும் அவை வெளிப்படை சமன்பாடுகள் கொண்டுள்ளன.வார்ப்புரு:R

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist