சிம்சன் கோடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
ABC முக்கோணத்தின் சுற்று வட்டத்தின் மீதுள்ள புள்ளி P. இதன் சிம்சன் கோடு LN (சிவப்பு)

வடிவவியலில், ABC முக்கோணத்தின் சுற்று வட்டத்தின் மீதுள்ள ஒரு புள்ளி P எனில் அப்புள்ளிக்கு மிக அருகாமையில், AB, AC, BC ஆகிய மூன்று கோடுகளின் மீது அமையும் மூன்று புள்ளிகளும் நேர்கோட்டமைபவையாக இருக்கும்.[1] இந்த மூன்று புள்ளிகளின் வழியாகச் செல்லும் கோடு, P புள்ளியின் சிம்சன் கோடு (Simson line) ஆகும். இக்கோடு இசுக்காட்டுலாந்து கணிதவியலாளர் இராபர்ட்டு சிம்சன் பெயரால் அழைக்கப்படுகிறது.[2] இருப்பினும், இசுக்காட்டுலாந்து கணிதவியலாளரும் வானிலையாளருமான வில்லியம் வாலசுதான் இக்கருத்துருவை முதன்முதலாக 1799 இல் வெளியிட்டார்.[3]

இதன் மறுதலையும் உண்மையாகும்.

P புள்ளிக்கு மிக அருகில் மூன்று கோடுகளின் மீதமையும் புள்ளிகள் மூன்றும் ஒரே கோட்டிலமைவதோடு, மூன்று கோடுகளில் எந்த இரண்டும் இணையான கோடுகள் இல்லையெனில், அம்மூன்று கோடுகளால் அமையும் முக்கோணத்தின் சுற்றுவட்டத்தின் மீது புள்ளி P அமையும்.

இருத்தலை நிறுவல்

L,M,N புள்ளிகள் மூன்றும் நேர்கோட்டமைபவை என நிறுவுவதற்கு NMP+PML=180 எனக் காட்ட வேண்டும்.

நிறுவல்: படத்தில் தரவுகளின் படி, PCAB ஒரு வட்ட நாற்கரம்

  1. PBA+ACP=180 (வட்ட நாற்கரத்தில் எதிர்கோணங்களின் கூடுதல் 180)
  2. PBN+ACP=180 (PBA=PBN)
  3. PMNB ஒரு வட்ட நாற்கரமாகும். (தேலேசுத் தேற்றம்)
  4. PBN+NMP=180. (வட்ட நாற்கரத்தில் எதிர்கோணங்களின் கூடுதல் 180)
  5. NMP=ACP. (படி 2, 4)
  6. PLCM ஒரு வட்ட நாற்கரம்
  7. PML=PCL ( உள்வரை கோணத் தேற்றம்
  8. PCL=180ACP. (மிகைநிரப்பு கோணங்கள்)
  9. PML=180ACP (படி 7, 8)
  10. NMP+PML=ACP+(180ACP)=180

எனவே L,M,N புள்ளிகள் மூன்றும் நேர்கோட்டமைபவை என்பது நிறுவப்படுகிறது.

பண்புகள்

  • முக்கோணத்தின் ஒரு உச்சியின் சிம்சன் கோடு, அவ்வுச்சியிலிருந்து முக்கோணத்திற்கு வரையப்படும் குத்துக்கோடாகும். மேலும் அவ்வுச்சியின் எதிரடிப்புள்ளியின் (விட்டவாக்கில் எதிர் புள்ளி) சிம்சன் கோடானது, அந்த உச்சிக்கு எதிர்ப்பக்கமுள்ள முக்கோணத்தின் பக்கமாக இருக்கும்.
  • முக்கோணத்தின் சுற்றுவட்டத்தின் மீதுள்ள இரு புள்ளிகள் P, Q எனில், அவற்றின் சிம்சன் கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தின் அளவு, PQ வில்லின் கோணத்தில் பாதியாக இருக்கும். இவ்விரு புள்ளிகளும் விட்டவாக்கில் எதிரெதிராக இருந்தால் அவற்றின் சிம்சன் கோடுகள் செங்குத்தானவையாகவும் அவை வெட்டும் புள்ளியானது முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின் மீதும் இருக்கும்.
  • ABC முக்கோணத்தின் [[குத்துக்கோடு (முக்கோணம்)|செங்கோட்டு மையம் H எனில், P இன் சிம்சன் கோடானது PH கோட்டை இருசமக்கூறிடும். அவ்வாறு இருசமக்கூறிடும் புள்ளி ஒன்பது-புள்ளி வட்டத்தின் மீதமையும்.
  • இரு முக்கோணங்கள் ஒரே சுற்றுவட்டமுடையவையாக இருந்தால், P புள்ளியின் இரு சிம்சன் கோடுகளுக்கு இடைப்பட்ட கோணமானது P இன் நிலையைச் சார்ந்திருக்காது.
  • குறைந்தது 5 பக்கங்களுடைய எந்தவொரு குவிவு பல்கோணத்திற்கும் சிம்சன் கோடு கிடையாது.[4]

சிக்கலெண் தளத்தில்

முக்கோணத்தை சிக்கலெண் தளத்தில் எடுத்துக்கொள்ள, அலகு சுற்றுவட்டம் கொண்ட ABC முக்கோணத்தின் உச்சிகளின் சிக்கலெண் ஆயதொலைகள் a, b, c; சுற்றுவட்டத்தின் மீதுள்ள ஒரு P புள்ளியின் ஆயதொலைவு p எனில் இப்புள்ளியின் சிம்சன் கோடானது கீழுள்ள சமன்பாட்டை நிறைவு செய்யும் புள்ளிகளாலான (z) கணமாகும்:[5]வார்ப்புரு:Rp

2abcz¯2pz+p2+(a+b+c)p(bc+ca+ab)abcp=0,

z¯, என்பது z இன் இணைச் சிக்கலெண்.

மேற்கோள்கள்

  1. H.S.M. Coxeter and S.L. Greitzer, Geometry revisited, Math. Assoc. America, 1967: p.41.
  2. வார்ப்புரு:Cite web
  3. வார்ப்புரு:Cite web
  4. வார்ப்புரு:Cite journal
  5. Todor Zaharinov, "The Simson triangle and its properties", Forum Geometricorum 17 (2017), 373--381. http://forumgeom.fau.edu/FG2017volume17/FG201736.pdf

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:Commons category

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சிம்சன்_கோடு&oldid=1601" இலிருந்து மீள்விக்கப்பட்டது