தகு வகுஎண் சார்பு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

கணிதத்தில் ஒரு இயல் எண் n இன் தகு வகுஎண் கூட்டுத்தொகை (aliquot sum) அல்லது தகு வகுஎண் கூட்டுத்தொகைச் சார்பு (aliquot sum function) அல்லது தகு வகுஎண் சார்பு என்பது n இன் தகு வகுஎண்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கும். இதன் குறியீடு s(n) ஆகும்.

s(n)=σ1(n)n (இதில் σ1(n) என்பது, வகுஎண் சார்பு ஆகும்.)
s(n), n இன் அனைத்து தகு வகுஎண்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கிறது. அதாவது n நீங்கலாக, n இன் மற்ற வகுஎண்களின் கூட்டுத்தொகையைத் தருகிறது.
s(n)=d|n,dnd.

பகா எண்கள், நிறைவெண்கள், குறைவெண்கள், மிகையெண்கள்) ஆகியவற்றின் இயல்புகளைக் காணப் பயன்படுகின்றது. மேலும், [[தகு வகுஎண்களின் கூட்டுத் தொடர்முறைதகு வகுஎண் கூட்டுத்தொகை தொடர்முறையை வரையறுக்கவும் பயன்படுகிறது.


எடுத்துக்காட்டு

n = 15 எனில் 15, நீங்கலான அதன் தகு வகுஎண்கள்: 1, 3, 5

s(15) = 1 + 3 + 5 = 9

வார்ப்புரு:Nowrap எனில் வார்ப்புரு:Math இன் மதிப்புகள்:

0, 1, 1, 3, 1, 6, 1, 7, 4, 8, 1, 16, 1, 10, 9, 15, 1, 21, 1, 22, 11, 14, 1, 36, 6, 16, 13, 28, 1, 42, 1, 31, 15, 20, 13, 55, 1, 22, 17, 50, 1, 54, 1, 40, 33, 26, 1, 76, 8, 43, ... வார்ப்புரு:OEIS

குறிப்பிடத்தக்க எண்களின் இயல்பைக் காணல்

குறிப்பிடத்தக்க எண்களின் இயல்பைக் காண இக்கூட்டுத்தொகையைப் பயன்படுத்தலாம்.

  • தகு வகுஎண் கூட்டுத்தொகையானது பூச்சியமாகவுள்ள ஒரேயொரு எண் 1
  • ஒரு எண்ணின் தகு வகுஎண் கூட்டுத்தொகையானது '1' ஆக 'இருந்தால், இருந்தால் மட்டுமே' அவ்வெண் பகா எண்ணாக இருக்கும்.[1]

மறுசெய்கை

வார்ப்புரு:Main தகு வகுஎண் கூட்டுச்சார்பைத் தொடர்ந்து செயற்படுத்துவதன் மூலம் n இன் தகு வகுஎண்களின் கூட்டுத் தொடர்முறையைப் (aliquot sequence) பெறலாம். இச்சார்பு கட்டுப்படுத்தப்பட்ட வகுஎண் சார்பு (restricted divisor function) எனவும் அழைக்கப்படும்.[2]

வார்ப்புரு:Mvar ஒரு எதிர்மமில்லா முழுவெண் எனில், அதன் தகு வகுஎண்களின் கூட்டுத் தொடர்முறை::வார்ப்புரு:Math, இத் தொடர்முறையில் வார்ப்புரு:Math என வரையறுத்துக்கொள்ளப்படுகிறது.

இத்தொடர்முறையானது எப்போதும் ஒரு பகா எண், அல்லது நிறைவெண் கொண்டு முடிவடைகிறதா என்பது அறியப்படாத விவரமாகவே உள்ளது.[3]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=தகு_வகுஎண்_சார்பு&oldid=1206" இலிருந்து மீள்விக்கப்பட்டது