திசையன் இயற்கணிதத் தொடர்புகள்
யூக்ளிடின் முப்பரிமாண வெளியில் அமையும் திசையன்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள திசையன் இயற்கணிதத் தொடர்புகள் (vector algebra relations) பொருந்தும்.[1] இத்தொடர்புகளில் சில, மூன்றுக்கும் மேற்பட்டப் பரிமாணங்களில் அமையும் திசையன்களுக்கும் பொருந்திவரும். ஆனால் அனைத்துத் தொடர்புகளுக்கும் இது பொருந்தாது. எடுத்துக்காட்டாக, இரு திசையன்களின் குறுக்குப் பெருக்கல் எல்லா உயர்ப் பரிமாணங்களுக்கும் பொருந்தாது.
அளவுகள்
ஒரு திசையன் A -ன் அளவு (magnitude) பித்தாகரசு தேற்றத்தைப் பயன்படுத்தி, ஒன்றுக்கொன்று செங்குத்தான மூன்று திசைகளில் அமையும் அதன் கூறுகளினால் தீர்மானிக்கப்படுகிறது:
ஒரு திசையனின் அளவு, புள்ளிப் பெருக்கல் வாயிலாகவும் தரப்படுகிறது:
சமனின்மைகள்
- -முப்பரிமாண கோஷி-ஷ்வார்ஸ் சமனின்மை.
- -முப்பரிமாண முக்கோண சமனின்மை
- -முப்பரிமாண நேர்மாறு முக்கோண சமனின்மை.
இங்கு (A · B) என்பது A மற்றும் B திசையன்களின் புள்ளிப் பெருக்கலைக் குறிக்கும்.
கோணங்கள்
இரு திசையன்களுக்கு இடையேயுள்ள கோணம் θ, அவற்றின் புள்ளிப் பெருக்கல் மற்றும் குறுக்குப் பெருக்கலால் வரையறுக்கப்படுகிறது:[1][2]
வலது-கை விதிப்படி, θ -ன் நேர்ம மதிப்பிற்கு, B ஆனது A -லிருந்து கடிகாரத்திசைக்கு எதிராகவும், எதிர்ம மதிப்பிற்கு கடிகாரதிசையிலும் அமையும்.
இங்கு A × B என்பது A மற்றும் B திசையன்களின் குறுக்குப் பெருக்கலைக் குறிக்கும்.
பித்தாகரசின் முற்றொருமையைப் பயன்படுத்த:
திசையன் A = (Ax, Ay, Az) ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமையும் மூன்று ஆயஅச்சுகள் x-, y- மற்றும் z -க்களுடன் உண்டாக்கும் கோணங்கள் முறையே α, β, γ எனில்:
இதிலிருந்து:
இங்கு மூன்றும் எடுத்துக்கொள்ளப்பட்ட மூன்று ஆயஅச்சுகளின் திசையில் அமைந்த அலகுத்திசையன்களாகும்.
பரப்பும் கனஅளவும்
A மற்றும் B திசையன்களை அடுத்துள்ள பக்கங்களாகக் கொண்ட ஒரு இணைகரத்தின் பரப்பு Σ :
இங்கு θ - A மற்றும் B திசையன்களுக்கு இடையேயுள்ள கோணம்.
இதன் வர்க்க மதிப்பு:[3]
இதேபோல A, B மற்றும் C -திசையன்களால் அமையும் ஒரு இணைகரத்திண்மத்தின் கனஅளவின் வர்க்கம்:[3]
இதனை n-பரிமாணங்களுக்கும் நீட்டிக்கலாம்.
திசையன்களின் கூட்டலும் பெருக்கலும்
பின்வரும் தொடர்புகளில் சில புள்ளிப் பெருக்கல் மற்றும் குறுக்குப் பெருக்கல் சம்பந்தப்பட்டது.
- -திசையன்களின் கூட்டல் மீதான, திசையிலிப் பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு.,
- -திசையன் கூட்டலின் பரிமாற்றுப் பண்பு.
- -திசையன் கூட்டலின் சேர்ப்புப் பண்பு.
- -புள்ளிப் பெருக்கலின் பரிமாற்றுத்தன்மை.
- -குறுக்குப் பெருக்கலின் பரிமாறாத்தன்மை.
- -புள்ளிப் பெருக்கலைப் பொறுத்து திசையன் கூட்டலின் பங்கீட்டுப்பண்பு.
- -குறுக்குப் பெருக்கலைப் பொறுத்து திசையன் கூட்டலின் பங்கீட்டுப்பண்பு.
- -திசையன் முப்பெருக்கம்
- -முப்பரிமாண பினேட்–கோஷி முற்றொருமை
- மேலுள்ள முற்றொருமையில் A = C and B = D எனில்:
- -முப்பரிமாணத்தில் லெக்ராஞ்சியின் முற்றொருமை
இங்கு [A, B, C] என்பது திசையிலி முப்பெருக்கம் A · (B × C) -ஐக் குறிக்கும்.
- A, B, C என்பன ஒரே கோட்டில் அமையாத தரப்பட்ட மூன்று திசையன்கள் எனில், ஏதேனும் ஒரு திசையன் D பின்வருமாறு தரப்படும்:[6]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 See, for example, வார்ப்புரு:Cite book
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ 3.0 3.1 வார்ப்புரு:Cite book
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ This formula is applied to spherical trigonometry by வார்ப்புரு:Cite book
- ↑ வார்ப்புரு:Cite book