நீட்டலளவை

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

நீட்டலளவை அல்லது நீள அலகுகள் (units of length) என்பது நீளம், உயரம், ஆழம், தூரம் போன்ற நீள அளவுகளை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அலகுகள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அமெரிக்க அலகுகள், மற்றும் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் மெட்ரிக் முறை ஆகியன முக்கியமான அலகுகள் ஆகும். மெட்ரிக்கு முறை எஸ்ஐ, மற்றும் எஸ்ஐ அல்லாத அலகுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.[1][2][3]

மெட்ரிக்கு முறை

வார்ப்புரு:Main

எஸ்ஐ (SI)

வார்ப்புரு:Main SI எனப்படும் அனைத்துலக முறை அலகுகளில் நீளத்தின் அலகு மீட்டர் ஆகும். வெற்றிடத்தில் ஒளியானது வார்ப்புரு:Frac நொடியில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர்.[4] இது அண்ணளவாக 1.0936 யார்கள் ஆகும். ஏனைய அலகுகள் மீட்டருடன் பின்வரும் அட்டவணையில் உள்ள முன்னோட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் பெறப்படலாம்:

வார்ப்புரு:SI-Prefixes

எடுத்துக்காட்டாக, ஒரு கிலோமீட்டர் 1000 மீட்டர்கள் ஆகும்.

SI-அல்லாதவை

CGI எனப்படும் சென்டிமீட்டர்-கிராம்-செக்கண்டு முறை அலகுகளில், நீளத்தின் அடிப்படை அலகு செண்ட்டி மீட்டர் ஆகும். இது மீட்டரின் 1/100 பங்காகும்.

SI-அல்லாத நீளத்தின் ஏனைய அலகுகள்:

இம்பீரியல்/அமெரிக்க அலகு

வார்ப்புரு:Main இம்பீரியல் மர்றும் அமெரிக்க அலகு முறையில் நீளத்தின் அடிப்படை அலகு யார் ஆகும். 1959 ஆம் ஆண்டு பன்னாட்டு உடன்படிக்கயின் படில், ஒரு யார் என்பது 0.9144 மீட்டர்கள் ஆகும்.[2][5]

பொதுவான இம்பீரியல் அலகுகள்:[6]

கடல்-சார்ந்த

மாலுமிகளால் பயன்படுத்தப்படும் கடல்-சார் நீள அலகுகள்:

  • பதொம் (மெட்ரிக்கு-அல்லாத நாடுகளில் ஆழம் அளப்பதற்கு) (2 யார்கள் = 1.8288 மீ)
  • கடல் மைல் (1852 மீ)

வான்வெளி

வானோட்டிகள் உயரத்தை அடியிலும் (சீனா, உருசியா தவிர்த்து), தூரத்தை கடல் மைலிலும் அளக்கிறார்கள்.

நில அளவை

ஐக்கிய அமெரிக்காவில் நில அளவையாளர்கள்:

  • சங்கிலி (~20.1மீ)
  • ரொட் (rod) அல்லது பேர்ச் (perch) (~5 மீ)

ஆகிய அலகுகளையே தற்போதும் பயன்படுத்துகிறார்கள்.

அறிவியல்

வானியல்

வானியலில் பின்வரும் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன:

இயற்பியல்

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=நீட்டலளவை&oldid=910" இலிருந்து மீள்விக்கப்பட்டது