நீட்டல் விரிவுக் குணகம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

நீட்சிக் குணகம் அல்லது நீட்சிக் கெழு (coefficient of linear expansion) என்பது ஓர் அலகு நீளமுள்ள ஒரு பொருளின் வெப்பநிலையைசெ அளவுக்கு உயர்த்தும் போது ஏற்படும் நீளத்தில் ஏற்படும் விரிவு நீட்சியாகும். தொடக்க நிலை நீளம் L1 என்று கொண்டால், அதன் வெப்ப நிலையினை T1 °C இல் இருந்து T2 °C ஆக உயர்த்தும்போது அதன் நீளம் L2 ஆக மாறுமானால் அதன் வெப்ப நீட்சிக் குணகம்:

α=L2L1T2T1

இதனை

α=1LdLdT

என்றும் எழுதலாம். இங்கு α என்பது நீட்சிக் கெழுவாகும். இந்தக் கெழு K−1 (கெ−1) என்னும் பண்பலகு கொண்டது. இது எல்லா வெப்பநிலை வரம்புகளிலும் ஒன்றாக இராது. அளக்கப்படும் வெப்பநிலை நிலவும் மதிப்புக்கு ஏற்ப சற்றே மாறுபடும். இந்நீட்சிக் கெழு பெரும்பாலும் 20°செ வெப்பநிலையில் அளந்துக் குறிக்கப்படுகிறது.

அளக்கப்படும் பொருளைச் சார்ந்து வெப்ப நீட்சிக் கெழு மாறும்.

பல்வேறு பொருள்களுக்கான வெப்ப நீட்சிக் கெழுவைக் கீழுள்ள அட்டவணையில் காணலாம். எடுத்துகாட்டாக, அலுமினியத்தின் வெப்பநீட்சிக் கெழு 23.1 என்றால் ஒரு மீட்டர் நீளமுள்ள அலுமினியம் ஒரு பாகை செல்சியசு வெப்பநிலை உயர்வுக்கு (20 °செ இல் அளக்கும்பொழுது) தன் நீளத்தில் 23.1 x 10−6 மீட்டர் அளவுக்கு நீளும்.

பொருள் வெப்பநீட்சிக் கெழு, α, 20 °செ இல்
(10−6°செ)
குறிப்புகள்
அலுமினியம் 23.1
அலுமினியம் நைட்ரைடு 5.3
பென்சோ-சைக்குளோ-பியூட்டீன்
(Benzocyclobutene)
42
பித்தளை 19
கரிம எஃகு 10.8
காங்கிரீட்டு
(கற்காரை)
12
செப்பு 17
வைரம் 1
எத்தனால் 250
காலியம் ஆர்சினைடு 5.8
பெட்ரோல்
>(கன்னெய்)
317
கண்ணாடி 8.5
கண்ணாடி, போரோசிலிக்கேட்டு 3.3
தங்கம் 14
இண்டியம் பாசுபைடு 4.6
இன்வார் 1.2
இரும்பு 11.8
கப்டான்
(Kapton)
20[1] தூப்பாண்டு கப்டான் 200 ஈ.என் (DuPont Kapton 200EN)
ஈயம் 29
மக்னீசியம் 26
பாதரசம் 61
மாலிப்டினம் 4.8
நிக்கல் 13
பிளாட்டினம் 9
நெகிழி
(பாலிவீனைல் குளோரைடு)
52
குவார்ட்சு
(தூய குவார்ட்சு)
0.59
நீலக்கல் 5.3[2] சி-அச்சுக்குக்கு அல்லது [001]உக்கு இணையான திசையில்
சிலிக்கான் கார்பைடு 2.77 [3]
சிலிக்கான் 3
வெள்ளி 18[4]
துருவேறா எஃகு 17.3
எஃகு 11.0 ~ 13.0 உட்கூறுகளைப் பொருத்தது
தைட்டேனியம் 8.6
தங்குசிட்டன் 4.5
நீர் 69

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  • பாட புத்தகம் -10ஆம் வகுப்பு, தமிழ்நாடு பாடநூல் கழகம்