நெப்டியூனியம் சிலிசைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

நெப்டியூனியம் சிலிசைடு (Neptunium silicide) NpSi2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] நெப்டியூனியமும் சிலிக்கானும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. படிகங்களாக உருவாகும் நெப்டியூனியம் சிலிசைடு தண்ணீரில் கரையாது.[2] நெப்டியூனியம் இருசிலிசைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு

Heating நெப்டியூனியம்(III) புளோரைடு சிலிக்கான் தூளுடன் சேர்த்து வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் நெப்டியூனியம் சிலிசைடு உருவாகும்:[3]

𝟦𝖭𝗉𝖥𝟥+𝟣𝟣𝖲𝗂 1500oC 𝟦𝖭𝗉𝖲𝗂𝟤+𝟥𝖲𝗂𝖥𝟦

இயற்பியல் பண்புகள்

நெப்டியூனியம் சிலிசைடு நாற்கோணப் படிக அமைப்பில் I41/amd, என்ற இடக்குழுவில் a = 0.396 நானோமீட்டர், c = 1.367 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களுடன் படிகங்களாக உருவாகிறது.[4][5]

நெப்டியூனியம் இருசிலிசைடும் தண்ணீரில் கரையாது.

வேதிப் பண்புகள்

நெப்டியூனியம் இருசிலிசைடு ஐதரசன் குளோரைடுடன் வினையில் ஈடுபடுகிறது:[3]

𝖭𝗉𝖲𝗂𝟤+𝟪𝖧𝖢𝗅  𝖭𝗉𝖢𝗅𝟦+𝟤𝖲𝗂𝖧𝟦

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:நெப்டியூனியம் சேர்மங்கள்