மாலிப்டினம் டை சல்பைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox மாலிப்டினம் இருசல்பைடு (Molybdenum disulfide) என்பது வார்ப்புரு:Chem என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமவேதிச் சேர்மம் ஆகும்.

இந்தச் சேர்மம் உலோக டை-காற்கோசனைடு வகையைச் சார்ந்தது. இது ஒரு வெள்ளிய கருப்பு நிறப் படிகம், இது மாலிப்டினத்தின் முதன்மைத் தாதுவான மாலிப்டினைட்டு என்ற வடிவில் பூமியில் கிடைக்கிறது.[1] வார்ப்புரு:Chem எளிதில் வேதிய வினைபுரியாத சேர்மமாகும். இது நீர்த்த அமிலத்தினாலோ, ஆக்சிசனாலோ பாதிக்கப்படாதது. மாலிப்டினம்-டை-சல்பைடு கடுங்கரியை ஒத்த தோற்றமுடையது. இதன் குறைந்த உராய்வுப் பண்பாலும், தன்முனைப்புத் திறனாலும் திட உயவுப்பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

உற்பத்தி

மாலிப்டினைட்டு

தூய்மையான வார்ப்புரு:Chem, மாலிப்டினைட்டு கனிமத்தில் இருந்து நுரை மிதப்பு முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது, இம்முறையில் பிரித்தெடுக்கும் போது கரிமம் முக்கிய மாசுப்பொருளாக உள்ளது.

பல்வேறு மாலிப்டினம் சேர்மங்களை ஐதரசன் சல்பைடுடன் வெப்ப வினைக்கு உட்படுத்தியும் மாலிப்டினம் இருசல்பைடை உற்பத்தி செய்யலாம்.[2]

𝖬𝗈+𝟤𝖧𝟤𝖲>800C𝖬𝗈𝖲𝟤+𝟤𝖧𝟤
𝖬𝗈𝖮𝟤+𝟤𝖧𝟤𝖲400C𝖬𝗈𝖲𝟤+𝟤𝖧𝟤𝖮

வடிவமைப்பு, இயற்பியல் பண்புகள் 

மாலிப்டினம் டை சல்பைடின் ஒற்றையடுக்கு மென்படலத்தின் மின்துகள் நுண்துபடம் . ஒப்பளவு நீளம்: 1 nm.[3]

வார்ப்புரு:Chem வழக்கமாக ஒப்பான வடிவமுடைய இரண்டு முக்கிய பலபடி வகைகளான 2H, 3R ஐ உள்ளடக்கிய கலவையாக உள்ளது, 2H வகை அதிகளவில் நிறைந்துள்ளது. 2H-வார்ப்புரு:Chem-இல் ஒவ்வொரு Mo(IV) மையமும் முக்கோணப் பட்டகத்தில் ஆறு சல்பைடு ஈந்தணைவிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு சல்பர் மையமும் பிரமிடு போன்ற முக்கோணப் பட்டகத்தின் உச்சியில் மூன்று  Mo மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, பற்பல முக்கோணப் பட்டகததை ஒன்றுடன் ஒன்று ஒரு அடுக்கில் இணைக்கும் போது மெல்லிய இழைபோன்ற ஒற்றையடுக்கு வடிவமுடைய மாலிப்டினம் இருசல்பைடு கிடைக்கும். இதில் மாலிப்டினம் அணு அடுக்கு இரண்டு சல்பர் அணு அடுக்குகளுக்கிடையில் அமைந்திருக்கிறது.[4] இரண்டு வார்ப்புரு:Chem மென்படலங்களுக்கு இடையே உள்ள சல்பைடு அணுக்களின் வலுவற்ற வான் டெர் வால்ஸ் விசையால், வார்ப்புரு:Chem குறைந்த உராய்வைக் கொண்டுள்ளது, இதனால் இது சிறந்த உயவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.[5]

வேதிவினைகள்

மாலிப்டினம்-டை-சல்பைடு சூழலில் அதிக நிலைத்தன்மை உடையது, வீரியமிக்க காரணிகளுடனே வினைபுரியும் தன்மை கொண்டது. இது ஆக்சிசனுடன் வெப்ப வினைக்கு உட்படும்போது மாலிப்டினம்-டிரை-ஆக்சைடை கொடுக்கிறது.

𝟤𝖬𝗈𝖲𝟤+𝟩𝖮𝟤400600C𝟤𝖬𝗈𝖮𝟥+𝟦𝖲𝖮𝟤

உயர்ந்த வெப்ப நிலைகளில் மாலிப்டினம் டை ஆக்சைடு குளோரினுடன் வினைபுரிந்து மாலிப்டினம் பெண்டாகுளோரைடை கொடுக்கிறது.

𝟤𝖬𝗈𝖲𝟤+𝟩𝖢𝗅𝟤t𝟤𝖬𝗈𝖢𝗅𝟧+𝟤𝖲𝟤𝖢𝗅𝟤

மாலிப்டினம் டை சல்பைடு இடைபுகுத்தப்பட்ட சேர்மங்களைத் தோற்றுவிக்க வழங்கியாக செயல்படுகிறது.[6] ஒரு உதாரணம் இலித்தியமேற்றப்பட்ட மூலப்பொருள், வார்ப்புரு:Chemவார்ப்புரு:Chem.[7] பியூட்டைல் இலித்தியத்துடன் இலித்தியமேற்றம் அடைந்து வார்ப்புரு:Chem ஐத் தோற்றுவிக்கிறது.[1]

𝖬𝗈𝖲𝟤+𝑥𝖫𝗂𝖫𝗂𝑥𝖬𝗈𝖲𝟤

பயன்பாடுகள் 

உயவுப்பொருளாக 

1–100 µm அளவுடைய வார்ப்புரு:Chem துகள்கள் உலர்ந்த உயவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.[8]

பெட்ரோலியம் தூய்மைப்படுத்தல்

வார்ப்புரு:Chem பெட்ரோ வேதியியலில் கந்தக நீக்கு வினைகளில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[9]

நீர் பிளப்பு வினை 

வார்ப்புரு:Chem மின்னாற்பகுப்பு முறையில் நீரிலிருந்து ஐதரசனையும் ஆக்சிசனையும் பிரித்தெடுக்கும் வினையில் ஆகச்சிறந்த வினையூக்கியாக பயன்படுத்தப்படுகிறது.[10]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:மாலிப்டினச் சேர்மங்கள் வார்ப்புரு:சல்பைடுகள்