மும்மூலைவிட்ட அணி

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

நேரியல் இயற்கணிதத்தில் மும்மூலைவிட்ட அணி (tridiagonal matrix) என்பது, முதன்மை மூலைவிட்டம், முதன்மை மூலைவிட்டத்திற்கு கீழமைந்த ஒரு மூலைவிட்டம், முதன்மை மூலைவிட்டத்திற்கு மேலமைந்த ஒரு மூலைவிட்டம் ஆகிய மூன்றின் உறுப்புகளை மட்டும் பூச்சியமற்றவையாகவும், ஏனைய உறுப்புகளை பூச்சியங்களாகவும் கொண்டதொரு அணியாகும்.

எடுத்துக்காட்டாக, கீழுள்ள அணியொரு மும்மூலைவிட்ட அணியாகும்.:

(1400341002340013).

ஒரு மும்மூலைவிட்ட அணியின் அணிக்கோவையானது அவ்வணியின் உறுப்புகளின் தொடரிகளால் (Continuant) பெறப்படுகிறது.[1]

n × n மும்மூலைவிட்ட அணிகளின் கணமானது ஒரு 3n-2 பரிமாண திசையன் வெளியை அமைக்கும்.

அடிக்குறிப்புகள்

வெளியிணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=மும்மூலைவிட்ட_அணி&oldid=1271" இலிருந்து மீள்விக்கப்பட்டது