விந்தை எண்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

எண் கோட்பாட்டில், விந்தை எண் (weird number) என்பது மிகையெண்ணாக, ஆனால் அரைநிறைவெண்ணாக இல்லாத ஒரு இயல் எண் ஆகும்.[1][2] அதாவது ஒரு இயலெண்ணின் தகு வகுஎண்களின் கூடுதல் அந்த எண்ணைவிடப் பெரியதாகவும், ஆனால் அவ்வகுஎண்களின் எந்தவொரு உட்கணத்தின் கூடுதலும் அந்த இயலெண்ணுக்குச் சமமாகவும் இல்லாமல் இருந்தால் அந்த இயலெண் ஒரு விந்தை எண்ணாகும்.

எடுத்துக்காட்டுகள்

  • மிகச் சிறிய விந்தை எண் 70.
70 இன் தகு வகுஎண்கள்: 1, 2, 5, 7, 10, 14, 35
இவற்றின் கூடுதல்: 1 + 2 + 5 + 7 + 10 + 14 + 35 = 74 > 70. ஆனால் இந்த வகுஎண்களின் உட்கணம் எதன் கூடுதலும் 70 க்குச் சமமில்லை. எனவே 70 ஒரு விந்தை எண்.

எண் 12 விந்தை எண் இல்லை.

ஏனெனில் 12 இன் தகு வகுஎண்களான 1, 2, 3, 4, 6 இன் கூடுதல் 16 > 12. அதாவது 12 ஒரு மிகையெண். ஆனால் 2, 4, 6 ஆகிய மூன்று வகுஎண்களின் கூடுதல் 2+4+6 = 12 ஆக இருப்பதால் 12 அரைநிறைவெண் கிடையாது. எனவே அது ஒரு விந்தை எண் அல்ல.

துவக்க விந்தை எண்களில் சில:

70, 836, 4030, 5830, 7192, 7912, 9272, 10430, 10570, 10792, 10990, 11410, 11690, 12110, 12530, 12670, 13370, 13510, 13790, 13930, 14770, ... வார்ப்புரு:OEIS.

பண்புகள்

விந்தை எண்கள் முடிவிலா எண்ணிக்கையில் உள்ளன[3] எடுத்துக்காட்டாக, p ஒரு பகாஎண்; p ≥ 149 என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்ட, p இன் மதிப்புகளுக்கு 70p விந்தை எண்களாக இருக்கும்.[4]

ஒற்றை விந்தை எண்கள் உள்ளனவா என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அவை 230 ≈ 1வார்ப்புரு:E  ஐ விடப் பெரியதாகவும்.[5] 1021 ஐ விடப் பெரியதாகவும் இருக்கும்.[6]

சிட்னி கிரவிட்சு (Sidney Kravitz) என்ற கணிதவியலாளர்,

k ஒரு முழுஎண்; 2k ஐ விடப் பெரிய பகா எண் Q ; R=2kQ(Q+1)(Q+1)2k என்பது ; also prime and greater than 2k ஐ விடப் பெரிய பகாஎண் எனில்

n=2k1QR என்பது ஒரு விந்தை எண் எனக் கண்டறிந்தார்.[7]

இந்த வாய்பாட்டைப் பயன்படுத்தி அவர் கண்டுபிடித்தப் பெரிய விந்தை எண்:

n=256(2611)153722867280912929  21052.

n ஒரு விந்தை எண்; n இன் வகுஎண்களின் கூட்டு σ(n) ஐ விடப் பெரிய பகாஎண் p எனில், pn உம் ஒரு விந்தை எண்ணாக இருக்கும்.[4]

வேறெந்தவொரு விந்தை எண்ணின் பெருக்குத்தொகையாக அமையாத விந்தை எண்கள் முதனிலை விந்தை எண்கள் (primitive weird numbers) எனப்படும் வார்ப்புரு:OEIS. முதனிலை விந்தை எண்கள் முடிவிலா எண்ணிக்கையில் உள்ளன.[8]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளியிணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=விந்தை_எண்&oldid=1209" இலிருந்து மீள்விக்கப்பட்டது