சேர்ப்பு அணி

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

நேரியல் இயற்கணிதத்தில் ஒரு சதுர அணியின் சேர்ப்பு அணி அல்லது இணைப்பு அணி (adjugate matrix) என்பது அச்சதுர அணியின் இணைக்காரணி அணியின் இடமாற்று அணியாகும்.[1]

வரையறை

A அணியின் இணைக்காரணி அணி C இன் இடமாற்று அணியானது A இன் சேர்ப்பு அணி அல்லது இணைப்பு அணி என வரையறுக்கப்படுகிறது.

adj(𝐀)=𝐂𝖳.

R ஒரு பரிமாற்று வளையம்; R இலுள்ள உறுப்புகளாலான வார்ப்புரு:Math அணி A.

𝐂ij=(1)i+j𝐌ij.
  • A அணியின் இணைக்காரணி அணி C என்பது ஒரு வார்ப்புரு:Math அணி; இதன் வார்ப்புரு:Math ஆவது உறுப்பு A அணியின் வார்ப்புரு:Math ஆவது இணைக்காரணியாக இருக்கும்
  • C அணியின் இடமாற்று அணியே A அணியின் சேர்ப்பு அணியாகும். அதாவது வார்ப்புரு:Math வரிசை கொண்ட சேர்ப்பு அணியின் (i,j) உறுப்பானது A அணியின் (j,i) இணைக்காரணியாக அமையும்:
adj(𝐀)ij=𝐂ji=(1)i+j𝐌ji.

𝐀adj(𝐀)=det(𝐀)𝐈.

  • R இல், det(A) நேர்மாற்றத்தக்கதாக இருந்தால், இருந்தால் மட்டுமே, A அணியும் நேர்மாற்றத்தக்க அணியாக இருக்கும். அவ்வாறு நேர்மாற்றத்தக்கதாக இருந்தால் கீழுள்ள இரு முடிவுகளும் உண்மையாகும்:
adj(𝐀)=det(𝐀)𝐀1,
𝐀1=1det(𝐀)adj(𝐀).

எடுத்துக்காட்டுகள்

1 × 1 பொது அணி

எந்தவொரு பொதுவான 1×1 அணிக்கும் அதன் சேர்ப்பு அணி: 𝐈=(1).

2 × 2 பொதுஅணி

𝐀=(abcd) என்ற 2 × 2 பொதுஅணியின் சேர்ப்பு அணி:
adj(𝐀)=(dbca).

மேலும் det(adj(A)) = det(A) என்பதும் adj(adj(A)) = A என்பதும் உண்மையாக இருக்கும்.

3 × 3 பொதுஅணி

𝐀=(a11a12a13a21a22a23a31a32a33)

இதன் இணைக்காரணி அணி:

𝐂=(+|a22a23a32a33||a21a23a31a33|+|a21a22a31a32||a12a13a32a33|+|a11a13a31a33||a11a12a31a32|+|a12a13a22a23||a11a13a21a23|+|a11a12a21a22|)

சேர்ப்பு அணி:

adj(𝐀)=𝐂𝖳=(+|a22a23a32a33||a12a13a32a33|+|a12a13a22a23||a21a23a31a33|+|a11a13a31a33||a11a13a21a23|+|a21a22a31a32||a11a12a31a32|+|a11a12a21a22|)

3 × 3 எண் அணி

adj(325102341)=(81845121462).

செயல்முறை:

(325102341) அணியின் இணைக்காரணி அணி:
𝐂=(+|0241||1231|+|1034||2541|+|3531||3234|+|2502||3512|+|3210|)=(85418126412)

இணைக்காரணி அணியின் இடமாற்று அணி:

𝐂𝖳=(85418126412)𝖳=(81845121462)=adj(325102341)

பண்புகள்

சேர்ப்பு அணியின் பண்புகள்:

A , B இரண்டும் வார்ப்புரு:Math அணிகள் எனில்:

adj(𝐈)=𝐈
adj(𝐀𝐁)=adj(𝐁)adj(𝐀)
adj(c𝐀)=cn1adj(𝐀)

m ஒரு முழு எண் எனில்:

adj(𝐀m)=adj(𝐀)m
adj(𝐀𝖳)=adj(𝐀)𝖳

A ஒரு n×n அணி; மேலும் n ≥ 2 எனில்:

det(adj(𝐀))=det(𝐀)n1,

மேலும் A ஒரு நேர்மாற்றத்தக்க n×n அணி எனில்:

adj(adj(𝐀))=det(𝐀)n2𝐀,

A நேர்மாற்றத்தக்கது, n = 2 எனில்:

det(adj(A)) = det(A)
adj(adj(A)) = A

நேர்மாற்றத்தக்க அணி A க்கு வார்ப்புரு:Mvar தடவைகள் சேர்ப்பு அணி காணக் கிடைப்பது:

adjk(𝐀)=det(𝐀)(n1)k(1)kn𝐀(1)k,
det(adjk(𝐀))=det(𝐀)(n1)k.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளியிணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சேர்ப்பு_அணி&oldid=1239" இலிருந்து மீள்விக்கப்பட்டது