இசை எண்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
இசை எண் Hn இன் அணுகு எல்லை γ+ln(x) (நீலக்கோடு, γ-ஆய்லரின் மாறிலி); n=x (சிவப்புக்கோடு).

கணிதத்தில், வார்ப்புரு:Mvar-ஆவது இசை எண் (harmonic number) என்பது, முதல் வார்ப்புரு:Mvar இயல் எண்களின் தலைகீழிகளின் கூட்டுத்தொகையாகும்: Hn=1+12+13++1n=k=1n1k.

வார்ப்புரு:Math, இலிருந்து தொடங்கும் இசை எண்கள் தொடர்வரிசை:: 1,32,116,2512,13760,

வார்ப்புரு:Mvar-ஆவது இசை எண்ணானது, வார்ப்புரு:Mvar நேர்ம முழுஎண்களின் இசைச் சராசரியின் தலைகீழியின் வார்ப்புரு:Mvar மடங்காக இருக்கும்.

பழங்காலம் முதற்கொண்டு இசை எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன; எண் கோட்பாட்டின் பல பிரிவுகளில் இசை எண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ரீமன் இசீட்டா சார்பியத்தோடு நெருங்கிய தொடர்புள்ளவை. மேலும், பல சிறப்புச் சார்புகளின் கோவைவைகளில் இடம்பெற்றுள்ளன.

இசை எண்கள் தோராயமாக, இயல் மடக்கைச் சார்பாக உள்ளன.[1]வார்ப்புரு:Rp இதனால், இசைத் தொடரானது எல்லையின்றி மிகப்பெரியதாக, ஆனால் மெதுவாக அதிகரிக்கிறது.1737 இல் ஆய்லர், இசைத் தொடரின் விரிதன்மைப் பயன்படுத்தி, பகாஎண்கள் முடிவற்றவை என்பதற்கு ஒரு புது நிறுவலை அளித்தார். ஆய்லரின் நிறுவல் 1859 இல் ரீமானால் சிக்கலெண் தளத்திற்கும் நீட்டிக்கப்பட்டது. இதுவே பகா எண்களின் பரவல் குறித்த ரீமான் கருதுகோளுக்கு வழியமைத்தது.

வார்ப்புரு:Nowrap ஐத் தவிர வேறெந்த இசையெண்ணும் ஒரு முழு எண் அல்ல என்ற முடிவை "பெட்ரான்டின் எடுகோள்" தருகிறது[2]

இசை எண்களைக் கொண்டுள்ள முற்றொருமைகள்

இசை எண்களின் மீள்வரு தொடர்பு: Hn+1=Hn+1n+1.

இசை எண்களுக்கும் இசுடர்லிங் சுழல் எண்ணுக்குமுள்ள தொடர்பு Hn=1n![n+12].

இசை எண்கள் நிறைவுசெய்யும் முற்றொருமைகள்: k=1nHk=(n+1)Hnn

k=1nHk2=(n+1)Hn2(2n+1)Hn+2n.

இவ்விரண்டும் ஒத்துள்ள தொகையீட்டு முடிவுகள்: 0xlogy dy=xlogxx;

0x(logy)2 dy=x(logx)22xlogx+2x.

வார்ப்புரு:Pi உடனான முற்றொருமைகள்

இசை எண்களையும் [[பை (கணித மாறிலி)|வார்ப்புரு:Pi]] இன் அடுக்குகளையும் கொண்ட பல முடிவுறாக் கூட்டுத்தொகைகள் உள்ளன:[3] n=1Hnn2n=π212n=1Hn2(n+1)2=11360π4n=1Hn2(n+1)2=11360π4n=1Hnn3=π472

கணக்கீடு

H_n, க்கான ஆய்லர் தொகையீட்டு வடிவம்:[4] 

Hn=011xn1xdx. (முற்றொருமை:1xn1x=1+x++xn1.)

வார்ப்புரு:Math எனப் பதிலிட: Hn=011xn1xdx=011(1u)nudu=01[k=1n(nk)(u)k1]du=k=1n(nk)01(u)k1du=k=1n(nk)(1)k1k.

இசை எண்களுக்கும் இயல் மடக்கைக்குமுள்ள தொடர்பை விளக்கும் வரைபடம். வார்ப்புரு:Math ஐ ரீமான் கூட்டுத்தொகையாகக் கொள்ளலாம்: 1n+1dxx=ln(n+1).

வார்ப்புரு:Mvar ஆவது இசை எண் கிட்டத்தட்ட வார்ப்புரு:Mvar இன் இயல் மடக்கையளவு பெரியதாக இருக்குமென்பதால் மேலுள்ள கூட்டுத்தொகையின் மதிப்பு 1n1xdx, என்ற தொகையீட்டுக்குச் சமமாக இருக்கு; இத்தொகையீட்டின் மதிப்பு வார்ப்புரு:Math ஆகும்.

எனவே, வார்ப்புரு:Math என்ற தொடர்வரிசை கீழுள்ளவாறான எல்லைக்கு ஒருபோக்காகக் குறையும்: limn(Hnlnn)=γ, இதிலுள்ள வார்ப்புரு:Math என்பது ஆய்லரின் மாறிலி.

Hnlnn+γ+12nk=1B2k2kn2k=lnn+γ+12n112n2+1120n4, இதிலுள்ள வார்ப்புரு:Math என்பவை பெர்னோலி எண்கள்..

வார்ப்புரு:Reflist

பிறப்பிக்கும் சார்புகள்

இசை எண்களுக்கான பிறப்பாக்கி:

n=1znHn=ln(1z)1z, (ln(z) - இயல் மடக்கை).
அடுக்கப் பிறப்பிக்கும் சார்பு:
n=1znn!Hn=ezk=1(1)k1kzkk!=ezEin(z), (Ein(z) என்பது அடுக்கத் தொகையீடு).

அடுக்கத் தொகையீட்டைப் பின்வருமாறும் எழுதலாம்:

Ein(z)=E1(z)+γ+lnz=Γ(0,z)+γ+lnz ( Γ(0, z) என்பது முழுமையற்ற காமா சார்பு).

வகுபடும்தன்மை

வார்ப்புரு:Nowrap ஐத் தவிர வேறெந்த இசையெண்ணும் ஒரு முழு எண் அல்ல.[5] [6]

Hn முழுவெண் அல்ல என்பதை நிரூபிக்க, 2k என்ற வார்ப்புரு:Nowrap வரையிலமைந்த மிகப்பெரிய இரண்டின் அடுக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்; வார்ப்புரு:Nowrap எண்களின் மீச்சிறு பொது மடங்கு M எனில், Hk ஐ சம பகுதிகளைக் கொண்ட பின்னங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்:

Hn=i=1nM/iM இப்பின்னங்களின் தொகுதிகளில் வார்ப்புரு:Nowrap என்ற ஒன்றுமட்டுமே ஒற்றைப்படை எண்ணாகவும் மற்றவையெல்லாம் இரட்டைப்படை எண்ணாகவும் இருக்கும். மேலும் வார்ப்புரு:Nowrap எனில், M என்பதே இரட்டைப்படையாக இருக்கும். எனவே இப்பின்னங்கள் அனைத்தும் ஒற்றைப்படைத் தொகுதிகளையும் இரட்டைப்படைப் பகுதிகளையும் கொண்டிருக்கும். எனவே Hn முழுஎண்ணாக இருக்காது.[5]

மேலும் வலுவாக, தொடர்ந்த முழுஎண்களைக்கொண்ட எந்தவொரு தொடர்வரிசையிலும், அதன் மற்றெந்த உறுப்புகளையும் விடப் பெரிய இரண்டின் அடுக்கால் வகுபடக்கூடிய தனித்ததொரு உறுப்பு இருக்கும். மேற்கண்ட விதத்திலேயே விவாதிக்க, எந்தவிரு இசையெண்களின் வித்தியாசமும் ஒரு முழுஎண்ணாக இருக்காது என்பதை அறியலாம்.[6]

இசையெண்கள் முழுஎண்களாக இருக்காது என்ற கூற்றை நிறுவும் மற்றொரு நிறுவல், Hn பின்னத்தின் பகுதியானது n/2 ஐ விடப் பெரிய பகா எண்களால் வகுபடும் என்பதையும், இப்பகா எண்களின் கணம் வெற்றுக்கணமாக இருக்காதென்பதற்கு பெர்ட்ரான்டின் எடுகோளையும் பயன்படுத்துகிறது. இந்நிறுவல் முறையானது H1=1, H2=1.5, H6=2.45 ஆகியவற்றைத் தவிர வேறெந்த இசையெண்ணும் முடிவுறு தசமமாக இருக்காது என்பதை வலுவாகக் காட்டுகிறது.[5] "ஒவ்வொரு பகாஎண்ணும் இசை எண்களின் முடிவுறு கண உறுப்புகளின் தொகுதிகளை மட்டுமே வகுக்கின்றன" என்ற கூற்று அனுமான நிலையில் உள்ளது; நிறுவப்படவில்லை.[7]

குறிப்புகள்

வார்ப்புரு:Reflist

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ConwayGuy என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. வார்ப்புரு:Cite book
  3. Sondow, Jonathan and Weisstein, Eric W. "Harmonic Number." From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/HarmonicNumber.html
  4. வார்ப்புரு:Citation.
  5. 5.0 5.1 5.2 வார்ப்புரு:Cite book
  6. 6.0 6.1 வார்ப்புரு:Cite journal See in particular Theorem 1, p. 516.
  7. வார்ப்புரு:Cite journal
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இசை_எண்&oldid=1771" இலிருந்து மீள்விக்கப்பட்டது