முழுமையான பெருக்கல் சார்பு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

எண் கோட்பாட்டில் முழுமையான பெருக்கல் சார்பு (completely multiplicative functions அல்லது totally multiplicative functions) என்பது ஒரு எண்கணிதச் சார்பு ஆகும். n ஒரு நேர்ம முழுஎண் எனில், முழுமையான பெருக்கல் சார்பு f(n) இன் மதிப்பு கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது:

f(1)=1
f(ab)=f(a)f(b), (a, b இரு நேர்ம முழுவெண்கள்)

முழுமையான பெருக்கல் சார்பின் சிறப்புவகையாக, சார்பகா எண்களுக்கு பெருக்கல் சார்பு அமைகிறது. அதன் வரையறை:

n ஒரு நேர்ம முழுஎண் எனில், பெருக்கல் சார்பு f(n) இன் மதிப்பு கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது:
f(1)=1
f(ab)=f(a)f(b), (a, b சார்பகா முழுஎண்கள்)

வரையறை

முழுமையான பெருக்கல் சார்பு என்பது இயல் எண்களின் கணத்தை ஆட்களமாகக்கொண்ட எண்கணிதச் சார்பாகும். இச்சார்பு f இன் கீழ் f(1) = 1 ; f(ab) = f(a)f(b) ( a, b இரு நேர்ம முழ்வெண்கள்) என அமையும்..[1] அதாவது:

f(1)=1
a,bdomain(f),f(ab)=f(a)(b).

f(1) = 1 என்ற கட்டுப்பாடு தரப்படாவிடில், f(1) = 0 எனவும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவ்வாறு கொள்ளும்போது a இன் எல்லா நேர்ம முழுவெண்மதிப்புகளுக்கும் f(a) = 0 ஆகிவிடும். இது ஒரு வலுவான கட்டுப்பாடாக அமையாது. f(1)=1 என நிலைப்படுத்திக்கொள்ளாவிட்டால், 0, 1 ஆகிய இரண்டுமே f(1) இன் மதிப்பாக அமைந்யும்:

f(1)=f(11)f(1)=f(1)f(1)f(1)=f(1)2f(1)2f(1)=0f(1)(f(1)1)=0f(1)=0f(1)=1.

(+,) (நேர்ம முழுஎண்களின் கணம், பெருக்கல் செயலியின் கீழ்) என்ற ஒற்றைக்குலத்திலிருந்து மற்றொரு ஒற்றைக்குலத்திற்கு வரையறுக்கப்பட்ட காப்பமைவியமாகவும் முழுமையான பெருக்கல் சார்பைக் கருதலாம்.

எடுத்துக்காட்டுகள்

  • முழுமையான பெருக்கல் சார்புக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டாக தலைக்கெழு 1 ஆகக்கொண்ட ஓருறுப்புக்கோவை அமையும்:
n என்ற நேர்ம முழுவெண்ணுக்கு, f(a) = an என வரையறுத்துக் கொண்டால்,
f(bc) = (bc)n = bncn = f(b)f(c), and f(1) = 1n = 1.

பண்புகள்

n = pa qb ... எனில்,
f(n) = f(p)a f(q)b ...
  • இரு பெருக்கல் சார்புகளின் டிரிழ்ச்லெட் பிணைவும் ஒரு பெருக்கல் சார்பாக இருக்கும்; ஆனால் இரு முழுமையான பெருக்கல் சார்புகளின் டிரிழ்ச்லெட் பிணைவானது முழுமையான பெருக்கல் சார்பாக இருக்கவேண்டியதில்லை.
  • ஒரு பெருக்கல் சார்பானது முழுமையான பெருக்கல் சார்பாக இருப்பதற்குச் சமானமான பல கூற்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக,
f ஒரு பெருக்கல் சார்பு எனில் அதன் டிரிழ்ச்லெட் நேர்மாறானது μf (μ என்பது மோபியஸ் சார்பு) என "இருந்தால், இருந்தால் மட்டுமே", f ஆனது முழுமையான பெருக்கல் சார்பாகவும் இருக்கும்.[2]
  • முழுமையான பெருக்கல் சார்புகள் பங்கீட்டு விதியை நிறைவுசெய்யும்.
f(g*h)=(fg)*(fh)

இதில் * குறியீடானது டிரிழ்ச்லெட் பெருக்கத்தையும், குறியீடு உறுப்புவாரியான பெருக்கலையும் குறிக்கின்றன.[3]

இப்பண்பின் ஒரு விளைவு:

f ஒரு முழுமையான பெருக்கல் சார்பு எனில், :f*f=τf

இம்முடிவை, மேலே தரப்பட்டள்ள பண்பில் g=h=1 எனப்பிரதியிட்டுப் பெறலாம். 1(n)=1 என்பது மாறிலிச் சார்பு; τ என்பது வகுஎண் சார்பு.

பங்கீட்டு விதியின் நிறுவல்

f(g*h)(n)=f(n)d|ng(d)h(nd)==d|nf(n)(g(d)h(nd))==d|n(f(d)f(nd))(g(d)h(nd)) (since f is completely multiplicative) ==d|n(f(d)g(d))(f(nd)h(nd))=(fg)*(fh).

மேற்கோள்கள்

  1. வார்ப்புரு:Cite book
  2. Apostol, p. 36
  3. Apostol pg. 49

வெளியிணைப்புகள்