வீழும் தொடர்பெருக்கம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

கணிதத்தில், வீழும் தொடர்பெருக்கம் (falling factorial) என்பது x -லிருந்து தொடங்கி தொடர்ந்து ஒன்றொன்றாக குறைந்துவரும் முந்தைய முந்தைய n காரணிகளின் பெருக்குத் தொகையைக் குறிக்கும். இங்கு n ஒரு குறையிலா முழு எண்ணாக இருத்தல் வேண்டும். அதாவது,

(x)n=x(x1)(x2)(xn+1) ஆகும்.

இக்கட்டுரையில் வீழும் தொடர்பெருக்கத்தைக் குறிக்க, வார்ப்புரு:Math என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது. வீழும் தொடர்பெருக்கமானது இறங்கும் தொடர்பெருக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.[1]

முதல் வீழும் தொடர்பெருக்கங்கள் சில:

x(0)=1

x(1)=x

x(2)=x(x1)=x2x

x(3)=x(x1)(x2)=x33x2+2x

x(4)=x(x1)(x2)(x3)=x46x3+11x26x

பண்புகள்

சாதாரண தொடர்பெருக்கத்தை வீழும் தொடர்பெருக்கம் மூலமாக பின்வருமாறு எழுதலாம்:

n!=n(n)

ஒரு ஈருறுப்புக் கெழுவை வீழும் தொடர்பெருக்கத்தின் மூலம் எழுதலாம்.

(x)nn!=(xn).

இதனால் ஈருறுப்புக் கெழுக்களுடைய பல முற்றொருமைகளில் வீழும் தொடர்பெருக்கம் காணப்படுகிறது.

எழும் மற்றும் வீழும் தொடர்பெருக்கங்களுக்கு இடையேயுள்ள தொடர்பு:

(x)(n)=(1)n(x)n. மற்றும்
x(n)=(x+n1)n.

ஒரு வீழும் தொடர்பெருக்கம் எந்தவொரு வளையத்திலும் ந்ன்கு வரையறுக்கப்படும் என்பதால், x -ஐ ஒரு கலப்பெண் (எதிர்ம முழுஎண்கள் உட்பட) அல்லது கலப்பெண் கெழுக்களுடைய பல்லுறுப்புக் கோவை அல்லது கலப்பெண் மதிப்புடைய சார்பு எனக் கொள்ளலாம்.

காமா சார்பை பயன்படுத்தி வீழும் தொடர்பெருக்கத்தை வார்ப்புரு:Math -ன் மெய்யெண் மதிப்புகளுக்கும் நீட்டிக்கலாம். இதற்கு வார்ப்புரு:Math மற்றும் வார்ப்புரு:Math இரண்டும் எதிர்ம முழு எண்களற்ற கலப்பெண்களாக இருக்க வேண்டும்.

(x)n=Γ(x+1)Γ(xn+1).

வார்ப்புரு:Math என்பது வார்ப்புரு:Math-ஐப் பொறுத்த வகையிடலைக் குறிக்குமானால்:

Dn(xa)=(a)nxan.

மாற்றுக் குறியீடு

ரொனால்ட் எல். கிரஹாம், டோனால்ட் இர்வின் நுத் மற்றும் ஓரென் ஃப்டாஷினிக் ஆகியோர் எழுதிய கான்கிரீட் மேத்தமெட்டிக்ஸ் -ல் வீழும் தொடர்பெருக்கத்திற்கு வேறொரு குறியீடு தரப்பட்டுள்ளது.[2]

இதன்படி வீழும் தொடர்பெருக்கம்:

xm_=x(x1)(xm+1)mfactorsfor integer m0;

பிற குறியீடுகள்:

வார்ப்புரு:Math,
வார்ப்புரு:Math,
வார்ப்புரு:Math,
வார்ப்புரு:Math.

வார்ப்புரு:Math என எழும் தொடர்பெருக்கம் குறிக்கப்படும்போது வீழும் தொடர்பெருக்கமானது வார்ப்புரு:Math எனக் குறிக்கப்படுகிறது.[3]

இவற்றையும் பார்க்க

குறிப்பு

வார்ப்புரு:Reflist

மேற்கோள்கள்

Weisstein, Eric W. "Falling Factorial." From MathWorld—A Wolfram Web Resource.

http://mathworld.wolfram.com/FallingFactorial.html

en:Falling factorial

  1. வார்ப்புரு:Citation (A reprint of the 1950 edition by Chelsea Publishing Co.)
  2. Ronald L. Graham, Donald E. Knuth, Oren Patashnik (1988) Concrete Mathematics, Addison-Wesley, Reading MA. வார்ப்புரு:ISBN, pp. 47,48
  3. வார்ப்புரு:Citation. The remark about the Pochhammer symbol is on page 414.