3 (எண்)

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox number 3 அல்லது மூன்று (three) என்பது 2 இற்குப் பிந்தையதும், 4 இற்கு முந்தையதுமான இயல் எண்ணாகும். இது மிகச் சிறிய ஒற்றைப்படை பகா எண்ணும், சதுர எண்ணுக்கு முந்தைய ஒரே பகா எண்ணும் ஆகும். 3 என்பது தமிழ் எண்களில் என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும். இது பல சமூகங்களில் சமய மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

காரணிகள்

மூன்றின் நேர்க் காரணிகள் 1, 3 என்பனவாகும்.[1]

இயல்புகள்

  • மூன்று ஓர் ஒற்றை எண்ணாகும்.
  • மூன்றானது இரண்டாவது முக்கோண எண்ணாகும்.
  • மூன்றை மூன்று வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
3=12+12+12
  • மூன்றானது நான்காவது பிபனாச்சி எண் ஆகும்.
  • மூன்றானது இரண்டாவது லூகாஸ் எண்ணாகும்.
  • மூன்று ஒரு சோஃவி ஜெர்மேன் முதன்மை எண் ஆகும். ஏனெனில், 2×3+1=7 என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சமபக்க முக்கோணியை உருவாக்கலாம்.[2]

மூன்றின் பெருமை


வேதம் மூன்று - இருக்கு,யசூர்,சாமம்
மூன்று மூர்த்திகள் - பிரம்மா,விஸ்ணு,சிவன்
தொழில்கள் மூன்று - படைத்தல்,காத்தல்,அழித்தல்
உலகம் மூன்று - பூதலம்,மீதலம்,பாதலம்
கடவுளின் நிலை மூன்று - அருவம்,உருவம்,அருவுருவம்
காலம் மூன்று - இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்
ஆசைகள் மூன்று - மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை
குணங்கள் மூன்று - சத்துவம்,ராயசம்,தாமதம்
தமிழ் மூன்று - இயல்,இசை,நாடகம்
கனிகள் மூன்று - மா,பலா,வாழை

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=3_(எண்)&oldid=633" இலிருந்து மீள்விக்கப்பட்டது