அலகுநிலை வகுஎண்
கணிதத்தில் ஒரு இயல் எண் a ஆனது மற்றொரு எண் b இன் அலகுநிலை வகுஎண்ணாக (unitary divisor, Hall divisor) இருக்கவேண்டுமானால், a ஆனது b இன் வகுஎண்ணாகவும் a, இரண்டும் சார்பகா எண்களாகவும் இருக்க வேண்டும் (அதாவது அவையிரண்டுக்கும் 1 ஐத் தவிர வேறு பொதுக்காரணி இருக்காது).
இந்த வரையறைக்குச் சமானமானதாக, "a இன் ஒவ்வொரு பகாக்காரணியின் மடங்கெண்ணும் அக்காரணிக்கு b இலுள்ள மடங்கெண்ணுக்குச் சமமாக "இருந்தால், இருந்தால் மட்டுமே" a ஆனது b இன் அலகுநிலை வகுஎண்ணாக இருக்கும்" எனக் கூறலாம்.
அலகுநிலை வகுஎண் என்ற கருத்துரு ஆர். வைத்தியநாதசாமி (1931) என்பவரால் துவக்கப்பட்டது. இதற்கு அவர் பயன்படுத்திய பெயர் "தொகுதி வகுஎண்" (block divisor) ஆகும்.[1]
எடுத்துக்காட்டு
- 60 இன் அலகுநிலை வகுஎண் 5. ஏனெனில்:
- இரண்டும் சார்பகா எண்கள். அதாவது அவற்றின் ஒரேயொரு பொதுக்காரணி 1.
மாறாக 6 ஐ எடுத்துக்கொண்டால் அது 60 இன் வகுஎண் மட்டுமே; அலகுநிலை வகுஎண்ணல்ல. ஏனெனில்:
- இரண்டிற்கு 1 ஐத் தவிர மற்றொரு பொதுக்காரணி 2 உள்ளது.
பண்புகள்
- ஒவ்வொரு இயல் எண்ணுக்கும் 1, ஒரு அலகுநிலை வகுஎண்ணாகும்.
- n இன் அலகுநிலை வகுஎண்களின் எண்ணிக்கை = 2k, இதில் k ஆனது, n இன் வெவ்வேறான பகாக் காரணிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
- n ஆனது இரண்டின் அடுக்காக (1 உட்பட) இருந்தால், அதன் அலகுநிலை வகுஎண்களின் கூட்டுத்தையானது ஒற்றையெண்ணாகவும்,
- n ஆனது இரண்டின் அடுக்காக இல்லாவிட்டால், அதன் அலகுநிலை வகுஎண்களின் கூட்டுத்தையானது டைரட்டையெண்ணாக இருக்கும்.
- n இன் அலகுநிலை வகுஎண்களின் எண்ணிகையும் கூட்டுத்தொகையும் பெருக்கல் சார்புகளாக இருக்கும். ஆனால் அவை முழுமையான பெருக்கல் சார்புகளாக இருக்காது. டிரிழ்ச்லெட்டின் பிறப்பிக்கும் சார்பு:
- n ஒரு வர்க்கக்காரணியற்ற முழுஎண்ணாக "இருந்தால், இருந்தால் மட்டுமே", n இன் ஒவ்வொரு வகுஎண்ணும் அலகுநிலை வகுஎண்ணாக இருக்கும்.
ஒற்றை அலகுநிலை வகுஎண்கள்
ஒற்றை அலகுநிலை வகுஎண்களின் k-ஆவது அடுக்குகளின் கூட்டுத்தொகை:
இதுவும் ஒரு பெருக்கல் சார்பாக இருக்கும்; மேலும் இதன் டிரிழ்ச்லெட்டின் பிறப்பிக்கும் சார்பு:
அலகுநிலை வகுஎண்களின் கூட்டுத்தொகை
அலகுநிலை வகுஎண்-கூட்டுதொகைச் சார்பின் குறியீடு: σ*(n); அலகுநிலை வகுஎண்களின் k-ஆவது அடுக்குகளின் கூட்டுத்தொகையின் குறியீடு: σ*k(n):
ஒரு எண்ணின் தகு வகுஎண்களின் கூட்டுத்தொகையானது அதே எண்ணாக இருக்குமானால், அந்த எண் அலகுநிலை செவ்விய எண் அல்லது அலகுநிலை நிறைவெண் என அழைக்கப்படும்.
நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியத் தொடர்வரிசைகள்
- வார்ப்புரு:OEIS2C = σ*0(n)
- வார்ப்புரு:OEIS2C = σ*1(n)
- வார்ப்புரு:OEIS2C முதல் வார்ப்புரு:OEIS2C வரை = σ*2(n) முதல் σ*8(n) வரை
- வார்ப்புரு:OEIS2C = σ(o)*0(n)
- வார்ப்புரு:OEIS2C = σ(o)*1(n)
- வார்ப்புரு:OEIS2C =
குறிப்புகள்
மேற்கோள்கள்
- வார்ப்புரு:Cite book Section B3.
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite journal
- வார்ப்புரு:Cite journal
- வார்ப்புரு:Cite journal
- வார்ப்புரு:Cite journal
- வார்ப்புரு:Cite journal
- வார்ப்புரு:Cite web
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite arXiv Section 4.2
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite journal